அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது மருத்துவ கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மீது விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி அளித்துள்ளது.
மருத்துவ கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு நடந்திருப்பதாக முகாந்திரம் இருப்பதாவும், இதற்காக உரிய விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு 2017-21ல் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.