மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அந்தப் படம் அனைவரிடத்திலும் பரவலான பாராட்டை பெற்றது. இதனையடுத்து அவர் கைதி படத்தை இயக்கினார். மன்சூர் அலிகானை மனதில் வைத்து கைதி கதையை லோகேஷ் எழுதியிருந்தாலும் இறுதியாக கார்த்தி அதில் நடித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான இப்படம் மிகப்பெரும் ஹிட் அடித்தது.அதன் பிறகு கோலிவுட் மாஸ் நடிகர் விஜயை இயக்குவதற்கான வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைக்கவே அந்த படத்தில் , ரசிகர்கள் இதுவரையில் பார்க்காத வாத்தியை (மாஸ்டர் ) அறிமுகம் செய்தார். அந்த படமும் வசூல் வேட்டை நடத்தியது. இதனை தொடர்ந்து நடிப்பு ஜாம்பவான்கள் என கொண்டாடப்படும் , மும்மூர்த்திகளை ஒரே திரையில் காட்டும் முயற்சியை கையில் எடுத்துள்ளார். படத்தில் ஏராளமான நடிகர்கள் களமிறக்கப்பட்டாலும் கமல்ஹாசன் , விஜய் சேதுபதி ஃபஹத் பாசில் உள்ளிட்டோரின் காம்போதான் ஹைலைட்.
விக்ரம் படத்தை கமலுக்கு சொந்தமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது . அனிருத் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.படத்தின் ஃபஸ்ட்லுக் பாலிவுட் வரையில் பட்டையை கிளப்பிய நிலையில், கமலின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான முதல் glance வீடியோவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.அவ்வபோது தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் அப்டேட்டை வெளியும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தற்போது கமலுடனான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் ஹைலைட் என்னவென்றால் படத்தில் ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார் லோகேஷ். அதில் விக்ரம் படம் அடுத்த ஆண்டு கோடை மாதங்களில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். முன்னதாக படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டிருந்ததும் நினைவு கூறத்தக்கது. சமீபத்தில் மார்ச் 31 ஆம் தேதி படம் வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில், லோகேஷ் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் முன்பு குறித்த அதே நாளில்தான் படத்தை வெளியிடுவார்கள் என தெரிகிறது. சண்டைக்காட்சியை படமாக்கும் செட்டில் இருந்து கமலுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை லோகேஷ் வெளியிட்டுள்ளார் லோகேஷ் . அந்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.
விக்ரம் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வருகிறது. கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. கடந்த மாத இறுதியில் தாம்பரத்தில் இப்படத்தின் மூன்றாம் கட்டப்படிப்பு நிறைவடைந்த நிலையில், லநான்காம் கட்டப் படப்பிடிப்பு கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கியது. ஒரு மாதம் திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்பு கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சென்னைக்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது. தற்போது விக்ரம் படப்பிடிப்புகள் , மும்பையில் உள்ள தாராவி பகுதிகளில் நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மீண்டும் கோவையில் விடுபட்ட காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர்.