சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. அதனை தொடர்ந்து பல சீரியல்களில் மிகவும் பிஸியாக நடித்து வந்த ஸ்ருதி, கடந்த ஆண்டு மே மாதம் அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ் ஜோடிகளாக இருந்த வந்த இந்த தம்பதியின் அழகான வாழ்க்கை ஒரே நாளில் அப்படியே தலைகீழாக மாறியது. கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி அரவிந்த் சேகர் மாரடைப்பால் உயிரிழந்தார். பாடி பிட்னஸ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்த அரவிந்த் சேகர் இறப்புக்கு பல காரணங்கள் இணையத்தில் பரவி வந்தன. ஆனால் இப்படி வதந்திகளை இணையத்தில் பரப்ப வேண்டாம் என ஸ்ருதி கேட்டுக் கொண்டார்.





 


மீண்டு வரும் ஸ்ருதி :


திருமணமாகி ஒரே ஆண்டில் காதல் கணவரை பிரிந்த துயரத்தில் இருந்து தற்போது மெதுமெதுவாக மீண்டு வரும் ஸ்ருதி சண்முகப்ரியா, அவ்வப்போது தனது கணவரின் நினைவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பகிர்ந்து வருகிறார். தன் கணவர் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் எப்போதும் உடன் வைத்திருக்கிறார் ஸ்ருதி. அவரின் ஆன்மா என்றுமே தன்னுடன் இருப்பதை உணரமுடிகிறது என முன்னர் பகிர்ந்த போஸ்ட் மூலம் தெரிவித்து இருந்தார்.

லேட்டஸ்ட்  ட்ராவல் வீடியோ :

அந்த வகையில் மறுபடியும் ஸ்ருதி சண்முகப்ரியா தன்னுடைய லேட்டஸ்ட் ட்ராவல் வீடியோ போஸ்ட் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த முறையும் கணவரின் புகைப்படமும் அவருடன் நிச்சயமாக இடம்பெற்றுள்ளது. "ட்ராவல் நிச்சயமாக குணப்படுத்தும், இந்த நேரத்தில் இந்த பாரஸ்ட் பயணம் மிகவும் தேவைப்பட்டது. அழகான இந்தப் பயணத்துக்கு நன்றி" என்ற ஒரு குறிப்புடன் தனது ஜங்கிள் பயணத்தின் வீடியோவை போஸ்ட் செய்துள்ளார் ஸ்ருதி சண்முகப்ரியா.


 






ஸ்ருதியின் இந்த வீடியோ லைக்ஸ்களை குவித்து வரும் அதே வேலையில், ரசிகர்கள் பலரும் பாசிட்டிவான கமெண்ட்ஸ் கொடுத்து ஸ்ருதியை உற்சாகப்படுத்தியுள்ளனர். இந்த சிகிச்சை முறை நிச்சயம் விரைவில் உங்களின் துயரத்தில் இருந்து குணமடைய உதவும், நேரமும் பயணமும் கண்டிப்பாக நீங்கள் குணமடைய உதவும் என பல விதங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.