சன் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடர் 'நாதஸ்வரம்'. இந்த சீரியலின் இயக்குனர் திருமுருகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் தங்கையாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இதன் தொடர்ச்சியாக வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.





திடீர் மரணம் :
 
கடந்த ஆண்டு மே மாதம் அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி அவ்வப்போது கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோ, ரீல்ஸ் போன்றவற்றை பகிர்ந்து ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்துவந்தார். மிகவும் சந்தோஷமான அவர்களின் வாழ்க்கையில் இடி விழுந்தது போல கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி அரவிந்த் சேகர் மாரடைப்பால் மரணமடைந்தார். ஃபிட்னஸ் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அரவிந்த் தனது உடலை பாடி பில்டரை போல பிட்டாக வைத்து இருந்தார். அரவிந்த் இறப்புக்கு பலரும் பல காரணங்களை சொல்லி இணையத்தில் வதந்தி வெளியிட்டு வந்தார்கள்.


ஸ்ருதி வேண்டுகோள் :

ஏற்கனவே ஒரு உயிரை இழந்துள்ள குடும்பத்திற்கு தேவையற்ற வதந்திகள் மனவேதனையை மேலும் அதிகரித்தது. அதனால் ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் பொய்யான தகவலை பரப்புவோருக்கு இது போல தேவையற்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார். அவரின் வீடியோ சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வைரலானது.

ஸ்ருதியின் இன்ஸ்டா ஸ்டோரி :

அந்த வகையில் ஸ்ருதி சண்முகப்ரியா தனது இன்ஸ்டாகிராம் மூலம் கணவரின் நினைவாக ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார். தனது கணவர் அரவிந்த் சேகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தான் செல்லும் இடம் எல்லாம் எடுத்து செல்வேன் என்பதை குறிப்பிட்டு உருக்கமான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பகிர்ந்துள்ளார்.  



"கனத்த இதயத்தில் பல நினைவுகள் வந்து போகின்றன. முதல்முறையாக சென்னையை விட்டு வெளியேறுவது கடினமாக இருக்கிறது. நான் எங்கு சென்றாலும் உன்னையும் உன் நினைவுகளையும் என இதயத்தில் எடுத்து செல்வேன். இனிவரும் பயணங்களிலும் இது தொடரும்" என பதிவிட்டுள்ளார் ஸ்ருதி.

சற்று மன ஆறுதலுக்காக கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஸ்னேகதீரம் தாலிக்குளம் சென்று படகில் பயணம் செல்லும்போது தனது கணவரின் நினைவுகளையும் உடன் எடுத்து சென்றுள்ள புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

ஸ்ருதியின் இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்த பிரிவு அவர்களின் உடல் ரீதியாக மட்டுமே தவிர மனதளவில் அவர்களை என்றுமே பிரிக்க முடியாது என ரசிகர்கள் ஆறுதல் தெரிவிக்கிறார்கள்