Shruthi Hassan: "இதை செய்ய நான் பிறக்கவில்லை" ஸ்ருதி ஹாசன் பதிவிட்ட நெகிழ்ச்சியான இன்ஸ்டா போஸ்ட்


ஸ்ருதி ஹாசன் திரையுலகில் கால் பதித்து 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறார். அவரின் ஆனந்தத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதயபூர்வமான குறிப்பின் மூலம் பதிவிட்டுள்ளார். 


ஸ்ருதி ஹாசன் தனது தந்தையை போலவே ஒரு மல்டி டேலண்ட்டட் பெர்சனாலிட்டி. திரையுலகில் ஒரு நடிகையாக அவர் கால் பதித்து 13 ஆண்டுகள் ஆனாலும் 1992ம் ஆண்டு வெளியான "தேவர் மகன்" திரைப்படத்தில் ஒரு பாடலை தனது ஆறு வயதிலேயே பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலக நாயகன் நடித்த "ஹே ராம்" திரைப்படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். சிறு வயது முதலே ஸ்ருதி ஹசன் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்தவர்.  


தமிழ் சினிமாவில் அறிமுகம் :


2011ம்  ஆண்டு வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஸ்ருதி ஹாசன். அதற்கு பிறகு பல தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான பல விருதுகளை பெற்றுள்ளார். 



ரீ என்ட்ரி:


2017ம் ஆண்டு முதல் திரையுலகில் ஒரு பிரேக் எடுத்து கொண்டாலும் 2020  ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான யாரா திரைப்படம் மற்றும் 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான கிராக் திரைப்படம் மூலம் ஸ்ருதி சினிமாவிற்குள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தது திரை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 


இதனை தொடர்ந்து தனது 13 ஆண்டுகள் சினிமா பயணத்தை எண்ணி நெகிழ்ச்சி அடைந்தார் ஸ்ருதி ஹசன். அவரின் மனமார்ந்த குறிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். 


நெகிழ்ச்சியான குறிப்பு: 


13 வருடங்களுக்கு முன்னர் 2009 ஆம் ஆண்டில் வெளியான "லக்" என்ற அதிரடி திரில்லர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஒரு படத்தை விட அதிகமாக நான் திரைப்படத்தில் நடிப்பேன் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. இந்த 13 ஆண்டுகளும் ஒரு மாயாஜாலம் போல மாறியுள்ளது. இதை செய்ய நான் பிறக்கவில்லை. ஆனால் நான் இன்று சினிமாவை நேசிக்க கற்று கொண்டேன். இன்று சினிமா என்னுடைய மகிழ்ச்சிக்கு மிக பெரிய ஆதாரமாக மாறியுள்ளது. உண்மையில் எனக்கு சினிமா வாழ்க்கையை கொடுத்துள்ளது. நான் என்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன். இந்தனை ஆண்டுகளில் வெற்றி மற்றும் தோல்வி இரண்டையும் எப்படி சமாளிப்பது என்பதையும் நம்பிக்கையுடன் இருப்பது அனைத்திற்க்கும் மேலாக எப்படி மற்றவர்களை பாராட்டுவது எப்படி என்பதையும் கற்றுக்கொண்டேன். எனக்கு கிடைத்த நன்றிகளுக்கும் பாராட்டுகளுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்றும் தனது குறிப்பை பதிவிட்டிருந்தார்.