உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான சுருதிஹாசன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட உடற்பயிற்சி வீடியோ  ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


நடிகை சுருதிஹாசன் ‘ஏழாம் அறிவு’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு விஜய், விஷால் உள்ளிட்ட  சில முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தற்போது தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கான வாய்ப்புகள் குறையவே அதிகமாக தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தார். மார்கெட் உச்சத்தில் இருந்த சமயத்தில் சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் அவை சுருதிக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இருந்தாலும் மும்பையில் தங்கியிருக்கும் சுருதி , டாப் பிராண்டுகளின் விளம்பர படங்கள் மற்றும் ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்று வருகிறார். தமிழில் இறுதியாக விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்திருந்தார்.


ஆனால் அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. சுருதிஹாசன் முன்னதாக  இத்தாலியை சேர்ந்த மைக்கல் கோர்ச்சல் என்பவரை காதலித்து வந்தார். அவர் லண்டலின் வசித்து வந்ததால் அவ்வப்போது அங்கும் விசிட் அடித்தார். பின்னர் மைக்கலை இந்தியாவிற்கு அழைத்து வந்து , தமிழர் கலாச்சாரங்களையும் கூட சொல்லிக்கொடுத்து, தனது தந்தை கமல்ஹாசனிடமும் கூட மைக்கேலை அறிமுகப்படுத்தினார். ஆனால் சில காலங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப் செய்துகொண்டனர். 







இந்நிலையில்  அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல ஓவியரான  சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட  புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவதும் இயல்பான ஒன்றுதான். இந்நிலையில்   சாந்தனு ஹசாரிகாவுடன் சுருதிஹாசன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு உடற்பயற்சி செய்துக்கொண்டிருக்க, ஸ்ட்ரெச்சஸ் என்னும் பயிற்சியை சாந்தனு ஹசாரிகா செய்துகொண்டிருக்கும்பொழுது , அவரை பார்த்து “சமோசா போல இருக்கிறார்” என கிண்டலடித்துள்ளார் சுருதி. இவர்களுடன் பிரபல Mma குத்துச்சண்டை வீரர் இர்ஃபான் கானும் இடம்பெற்றுள்ளார், அவரையும் டேக் செய்துள்ளார். இதற்கு கீழே ரசிகர்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். 






முன்னதாக சாந்தனு ஹசாரிகா வரைந்த ஓவியங்களுடன் சுருதிஹாசன் போஸ் கொடுத்த புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு கேப்ஷனாக  “நான்கு சுவற்றிற்குள் நாங்கள் உருவாக்கிய சொர்க்கம் “ பதிவிட்டிருந்தார்.