நடிகர் கமல்ஹாசன், ஃபகத் பாசில் விஜய் சேதுபதி நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் பலதரப்பில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கிடையே படம் குறித்து கமலஹாசனின் மகளும் நடிகருமான ஸ்ருதி ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.





இதுகுறித்துக் கூறுகையில், "தனது தந்தைக்காக மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நான் படத்தை மிகவும் விரும்பினேன், அப்பாவுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். குறிப்பாக தொற்றுநோயில் அனைவரும் எதிர்கொண்ட கடினமான காலங்களுக்குப் பிறகு, திரைப்படங்கள் இவ்வளவு சிறப்பாக தயாரிக்கப்படுவது ஆச்சரியமான விஷயமாக நான் நினைக்கிறேன். எனவே இந்தப் படத்தை மிகவும் ரசித்தேன், மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முந்தைய படைப்புகளையும் நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். அவர் ஒரு அற்புதமான இயக்குனர். படத்தில் உழைத்த அனைவருக்காகவும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், படத்தின் வெற்றி ஒரு அற்புதமான வெற்றியாகும். அப்பாவுக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.






தந்தையுடன் இணைந்து நடிக்கும் திட்டம் குறித்து கேட்டதற்கு, "நாங்கள் ஒரு திட்டத்தைத் தொடங்கினோம், ஆனால் அது நிறைவேறவில்லை. நாங்கள் சபாஷ் நாயுடு என்ற படத்தை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினோம், அது பல ஆண்டுகளாகக் கிடப்பிலேயே இருக்கிறது, ”என்று அவர் மேலும் கூறினார்.


விக்ரம் திரைப்படம் ஏற்கனவே சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் ரூ. 400 கோடியை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.