தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா சரண். சினிமாவில் வலம் வந்த சில காலங்களிலேயே பல இளைஞர்களில் கனவு கன்னியாகவே மாறிப்போனார் ஸ்ரியா. 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரீவ் என்னும் ரஷ்ய டென்னிஸ் வீரர் மற்றும் தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ள நிலையில் , ஸ்ரேயா மீண்டும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இயக்குநர் சுஜனா ராவ் இயக்கத்தில் கமனம் என்னும் படத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா. பெண்களுக்கு முக்கியத்துவம் கதையாக உருவாகியுள்ள இந்த படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதனை ரசிகர்களோடு அமர்ந்து பார்க்க வேண்டும் என்பதற்காக நடிகை ஸ்ரேயா ஆட்டோவில் திரையரங்கம் சென்றுள்ளார். ஐதராபாத்தில் உள்ள மல்லிகார்ஜுன் திரையரங்கில் கமனம் திரைப்படத்தைப் பார்க்க வந்திருந்த ரசிகர்களுக்கு ஸ்ரேயாவின் இந்த செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
கமனம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் . படம் தமிழ், தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து ராஜமௌளி இயக்கத்தில் வெளியாகவுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா. நேரடி தமிழ் படங்களான 'நரகாசூரன்', 'சண்டக்காரி' உள்ளிட்ட படங்களிலும் ஸ்ரேயா சரண் நடித்து வருகிறார்.