சினிமா நடிகைகளுக்கு மட்டுமில்லீங்க நம்மூரில் சீரியல் நடிகைகளுக்கும் ஃபேன்ஸ் கிளப் எல்லாம் இருக்கிறது. எல்லாப் புகழும் விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிகளுக்கே செல்லும். சினிமாவில் சிச்சுவேஷன் சாங்கெல்லாம் போட்டு ரொமான்டிக் காட்சிகள் எல்லாம் அமைத்து அவுட்டோரில் அசால்டாக படப்பிடிப்பு நடத்தி  சினிமாப் பெயர்களையே சூட்டி சீரியல் தயாரித்து வருகின்றனர். 


சீரியல் தயாரிப்பாளர்கள் சினிமாவுக்கே ஃபைனான்ஸ் பண்ணும் அளவுக்கு வளர்ந்துவிட்டனர். விஜய் டிவியில் ஒரு புதிய சீரியல் வந்தால் போட்டாப் போட்டியாக கலர்ஸ் தமிழிலும், ஜீ தமிழிலும் புதிய சீரியல்கள் வந்துவிடும். இப்படியாக சீரியல் பிசினஸ் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.






இப்படியாக, கலர்ஸ் தமிழில் அறிமுகமான ஸ்ரேயா அஞ்சன் திருமணம் என்ற சீரியலில் நடித்தார். இவருடன் சித்து என்பவர் நாயகனாக நடித்தார். ரீல் ஜோடியாக காதலில் கசிந்துருகிய சித்து, ஸ்ரேயா அஞ்சன் சீரியல் நடந்து கொண்டிருந்தபோதே காதல் வயப்பட்டனர். அண்மையில் திருமணமும் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.






பாசிட்டிவ் ஜோடி என்ற பெயரெடுத்த இந்த இணை அவ்வப்போது இன்ஸ்டாவில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இவர்கள் பதிவிடும் வீடியோவுக்காக ரசிகர்கள் காத்துக்கிடப்பதும் உண்டு. அப்படி ஜாலியாக பைக்கில் ரைடு செல்லும் வீடியோவை சித்து பதிவிட்டுள்ளார். மனைவியுடன் பைக் ரைடு என பதிவிட்டு வீடியோவை பகிர்ந்துள்ளார். காதல் வளர்த்தேன் பாடலின் கன்னட வெர்ஷன் பாடலுக்கு ரீல்ஸ் இணைத்து இந்த க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளார் சித்து.