பிரபல சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவன் தன்னுடைய புகைப்படத்தை சிலர் மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்டுள்ளதாக கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். 


அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், “ எல்லோருக்கும் வணக்கம். என்னுடைய வாட்ஸ் அப்பில் இருக்கும் நபர்களுக்கு இந்த செய்தியை கூற வேண்டும் என நினைத்து இந்த வீடியோவை வெளியிடுகிறேன். என்னுடைய  ஒரு போட்டோவை சிலர்  மார்பிங் செய்து, ஒரு புது நம்பரில் இருந்து என்னுடன் தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். இந்த பிரச்னை எப்படி தொடங்கியது என்று நான் சொல்லுகிறேன். காரணம், என்னைப்போல் யாரும் இதே போல ஏமாறக்கூடாது. கடந்த செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அந்த மெசேஜை நான் கிளிக் செய்த உடனேயே ஒரு ஆப் டவுன்லோடு ஆனது. உடனே என்னுடைய போனும் ஹேங் ஆகிவிட்டது.


 






அதன் பின்னர் சில நாட்களுக்கு பிறகு, நான் 5000 ரூபாய்க்கு லோன் வாங்கியதாகவும், அதைக்கட்ட வேண்டுமென மெசேஜ்கள் வர ஆரம்பித்தன. தொடர்ந்து கால் செய்து கேவலமாக பேசி லோனை அடைக்குமாறு பேசிதோடு, கட்டவில்லை என்றால் என்னுடைய போட்டோக்களை வெளியே அனுப்பி வைரல் ஆக்குவோம் என்றும் மிரட்டினர். இது தொடர்பாக நான் ஹைதராபாத் க்ரைம் போலீஸில் புகார் செய்திருக்கிறேன்.” என்று பேசினார். 


தொடர்ந்து பேசிய அவர் பேசமுடியாமல் அழுதார். மேலும் பேசிய அவர், “நான் எப்படிபட்டவர் என்பது என்னை சுற்றி உள்ளவர்களுக்கு தெரியும். எனக்கு தெரிந்தவர்களுக்கும், என்னுடைய பெற்றோருக்கும் கூட இந்த  போட்டோக்களை அவர்கள் அனுப்பி இருக்கின்றனர். அந்த ஒரு ஆப்பால் இவ்வளவு பெரிய சங்கடத்தை நான் சந்தித்து இருக்கிறேன். ஆகையால் இது போன்ற லோன்ஆப், லக்க மணி என வரும் ஆப்களை டவுன்லோடு செய்யாதீர்கள். தயவு செய்து இது போன்ற நம்பரில் இருந்து, இது போன்ற தகவல்கள் வரும் போது அந்த நம்பரை பிளாக் செய்யாமல் ரிப்போர்ட் ஆப்ஷனை அழுத்துங்கள். அப்படி செய்யும் போது மட்டும்தான் அவர்களால் அந்த போட்டோவை பிறருக்கு அனுப்ப முடியாது” என்று பேசியிருக்கிறார். 


 






சரவணன் மீனாட்சி சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த லட்சுமி வாசுதேவன் தொடர்ந்து ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி, முத்தழகு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, கன்னட உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள அவர், தமிழில் 555, தில்லாலங்கடி, திருட்டுக்கல்யாணம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.