பிக்பாஸ் பிரபலமாக அறியப்பட்டாலும், சீரியல்களில் அறிமுகமான ஷிவானி நாராயணன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஃபேமஸ் ஆனார். அதன் பின் சினிமா வாய்ப்புகளை பெற்ற அவர், இன்ஸ்டாகிராமில் சூடான போட்டோக்களை வெளியிடுவதில் முன்மாதிரியாக இருக்கிறார். 


திடீரென குடும்ப குத்துவிளக்கு மாதிரியான போட்டோக்கள் வரும். அதன் பின் பார்த்தால், திடீரென அதற்கு நேர்எதிரான போட்டோ வரும். இப்படி இருமாதிரியான போட்டோக்கள் வருவதால், எப்போதுமே ஷிவானி இன்ஸ்ட்கிராம் பக்கம், பரபரப்பாகவே காணப்படும்.


சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்த ஷிவானி, விக்ரம் படத்தின் தன் இருப்பை காட்டிக் கொள்ள ஒரு சம்பவத்தை செய்துள்ளார். ஜிம் ஒன்றில் பயிற்சி முடித்த பின்பாக, ஒரு போட்டோ எடுத்துள்ளார்.






விக்ரம் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வரும் சூர்யா, கையில் ஒரு மார்ஷல் நிறுவன ரேடியோவோடு வருவார். அதன் பின் நடக்கும் காட்சிகள் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஷிவானி, அதே மார்ஷல் ரேடியோ உடன், அமர்ந்து கையில் ஒரு குளிர்பான கேன் ஒன்றை பருகிக் கொண்டிருக்கிறார். உடற்பயிற்சி உடையில் இருக்கும் அவர், அந்த போட்டோவுக்கு ஜில் சீன்ஸ் என்கிற கேப்ஷனை அதனுடன் பதிவு செய்துள்ளார். 






டக்கென பார்த்தால் ப்ரியங்கா சோப்ரா மாதிரி தோற்றமளிக்கும் அந்த போட்டோ, கேப்ஷனை பார்த்து தான், அது ஷிவானி என்பதே தெரிந்து கொள்ளும் படியாக இருக்கிறது. ஷிவானியின் இந்த போட்டோ தற்போது அதிக அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லோரும் விக்ரம் படத்தை மறந்த நிலையில், தான் அதில் நடித்ததை நினைவூட்டும் விதமாக இந்த முயற்சியை ஷிவானி எடுத்திருக்கலாம் என பலரும் கூறிவருகின்றனர்.