பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கால் உடைந்த நிலையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1993 ஆம் ஆண்டு இந்தியில் ஷாருக்கான், கஜோல் நடித்த பாஜிகர் படத்தின் மூலம் அறிமுகமான ஷில்பா ஷெட்டி, 1994 ஆம் ஆண்டு வெளியான ஆக் படத்தின் மூலம் ஹீரோயினார். தொடர்ந்து தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் 1996 ஆம் ஆண்டு அறிமுகமான அவர், விஜய் நடித்த குஷி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியிருந்தார்.
இப்படி ரசிகர்களிடத்தில் நன்கு பிரபலமான ஷில்பா ஷெட்டி ஐபிஎல் தொடரில் சில ஆண்டுகள் ராஜஸ்தான் அணியின் உரிமையாளராக இருந்தார். இவர் தற்போது யாரிப்பாளர் ரோஹித் ஷெட்டியின் இந்தியன் போலீஸ் சர்வீஸ் வெப் சீரிஸ் நடித்து வருகிறார். இதில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, விவேக் ஓபராய் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஷில்பா ஷெட்டிக்கு காலில் அடிபட்டுள்ளது. காலில் கட்டுடன் அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை ஷில்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ரோல், கேமரா, ஒரு காலை உடைத்து என கூறியுள்ளார். மேலும் இதிலிருந்து மீண்டு வர 6 வாரங்கள் ஆகும் என்பதால் நான் விரைவில் வலுவாகவும் சிறப்பாகவும் திரும்புவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதுவரை எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெப் சீரிஸில் இடம் பெறும் ஆக்ஷன் காட்சிகளின் பதிவுகளை ஷில்பா பகிர்ந்தது வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்