சென்னை பூவிருந்தவல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர் (40), தொழிலதிபர். இவரது தம்பி ராஜேஷ் (37). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களது தாயார் தமிழ்ச்செல்வியுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் திரும்பி வந்து அவரது பீரோவில் வைத்துச் சென்ற 300 சவரன் நகையை பார்த்த போது அது மாயமாகியிருந்தது.


இதையடுத்து ராஜேஸின் மனைவி நகை, தமிழ்ச்செல்வியின் நகை 200 சவரன் நகையும், 5 தங்க கட்டிகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் . போலீசாரின் விசாரணையில் அண்ணன் சேகர் 550 சவரன் நகையை திருடி அவரது ஆசை நாயகிக்கு  கொடுத்திருப்பது தெரியவந்தது.




இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, சேகரின் மனைவி பிரிந்து சென்ற பிறகு, சேகருக்கும் வேளச்சேரி கேசரிபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஸ்வாதி (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் போரூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அடிக்கடி சந்தித்துக் கொள்வதோடு வெளியூர் வரை சென்று சுற்றியுள்ளனர்.  மேலும் வீட்டிலிருந்த 550 சவரன் நகையையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்ற சேகர் அவரது  ஸ்வாதியிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் 30 லட்சம் வரை செலவு செய்துள்ளார். இதனையடுத்து சேகர் மற்றும் சுவாதியை போலீசார் கைது செய்தனர். 


இது குறித்து மாடல் அழகியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்களை அவர் கூறினார். இது குறித்து போலீசாரிடம் தெரிவித்த மாடல் அழகி, ''எனக்கு ஸ்டார் ஓட்டல்களில் மது அருந்தும் பழக்கம் உள்ளது. சேகர் கொடுத்த நகைகளை எல்லாம் விற்று ஸ்டார் ஓட்டலில் மது அருந்தினேன். சேகர் கொடுத்த 3 கார்களை ஆண் நண்பர்களுக்கு கொடுத்துவிட்டேன். அந்த டுகாட்டி பைக்கையும் இளம்காதலுனுக்கு கிஃப்ட்டாக கொடுத்துவிட்டேன். எனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவேயில்லை. பல முயற்சிகள் எடுத்தும் பயனில்லை. அப்போதுதான் சேகர் வந்து சிக்கினார். என்னுடன் ஜாலியாக பொழுதை கழித்த மகிழ்ச்சியில் சேகர் எனக்கு கொடுத்த கட்டணம் மற்றும் பரிசை திருப்பிக் கேட்க யாருக்கும் உரிமையில்லை. சேகர் கொடுத்த பணம் நகை எல்லாம் செலவாகிப்போச்சு” என்றார்.


உள்ளூரில் சுற்றியது மட்டுமின்றி கோவா, ஊட்டி போன்ற இடங்களுக்கும் சேகருடன் சுற்றுலா சென்று ஜாலியாக இருந்துள்ளார் சுவாதி. அதுமட்டுமின்றி தாய்லாந்து செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் சேகர் செய்துவிட்ட நிலையில் இருவரும் போலீசில் சிக்கியுள்ளனர்.




இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்,  “சுவாதிக்கு ஏற்கனவே , திருமணம் ஆகியதை மறைத்து  சேகரை காதலித்து வருவதை போல் நடித்து வந்துள்ளார். சேகரிடம் பணம் மற்றும் நகைகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பெற்று வந்துள்ளார். சேகரும் பெண் மீது இருந்த காதல் மயக்கத்தால் பணம் மற்றும் நகையை தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார். சுவாதியுடன் சேகர் சேர்ந்து கொண்டு அடிக்கடி கோவா, ஊட்டி ,கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சுவாதியிடம் சேகர் 200 சவரன் நகைகளை வீட்டிற்கு தெரியாமல் கொடுத்துள்ளார். இதனை அடைந்த சேகரின் தாய் ஸ்வாதிவியிடம் சண்டையிட்டு மீண்டும் அந்த நகைகளை மீட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மீண்டும் இப்படி ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது என விசாரணையில் தெரிய வந்தது” என  காவல்துறையினர் தெரிவித்தனர்.