இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரும், பிரபல பாலிவுட் நடிகையுமானவர் ஷில்பா ஷெட்டி. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்குந்த்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வியான் மற்றும் சமிஷா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கடந்த மாதம் ஆபாசபடம் தயாரித்த குற்றச்சாட்டின் கீழ் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜ்குந்த்ரா மீது பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா குற்றம் சாட்டியிருந்தார். ராஜ்குந்த்ரா தன்னை ஆபாசமாகவும், அரைநிர்வாணமாகவும் நடிக்க வற்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், ஷெர்லின் சோப்ரா தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, ராஜ்குந்த்ரா எனக்கு வழிகாட்டியாக இருந்தார். நான் படப்பிடிப்பில் கவர்ச்சிகரமாக நடிக்கும்போது அவர் என்னை தவறாக வழிநடத்தினார். அவர் என்னிடம் என்னுடைய புகைப்படங்களும், வீடியோக்களும் நடிகை ஷில்பாஷெட்டிக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார். அரைநிர்வாணமா நடிப்பதும், ஆபாசமாக நடிப்பதும் இயல்பான ஒன்றே என்று ராஜ்குந்த்ரா என்னை நம்ப வைத்தார். அனைவரும் அதை செய்கிறார்கள், நானும் அதை செய்ய வேண்டும் என்று என்னை நம்ப வைத்தார்.
”ராஜ்குந்த்ராவை முதன்முறையாக சந்தித்தபோது, எனக்கு மிகப்பெரிய திருப்பம் ஏற்படப்போகிறது என்று நம்பினேன். ஆனால், அவர் என்னை தவறான செயல்களையே செய்ய வைத்தார். அவரிடம் மேற்கொண்டிருந்த ஒப்பந்தப்படி தொடக்கத்தில் கவர்ச்சிகரமான வீடியோக்களில் நடிக்கத் தொடங்கி முற்றிலும் ஆபாச வீடியோக்களில் நடிக்க வற்புறுத்தினர்.
ராஜ்குந்த்ரா என்னிடம் ஷில்பாஷெட்டிக்கு என்னுடைய வீடியோக்களும், புகைப்படங்களும் தொடர்ந்து கூறிவந்தார். இது எனக்கு மேலும் பல வீடியோக்களில் நடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியது. ஷில்பாஷெட்டி போன்ற மிகப்பெரிய நடிகைகளுக்கு நமது வீடியோக்கள் பிடித்துள்ளது என்று கூறும்போது நமதுக்கு எது சரியென்று, எது தவறென்று புரியாது.” இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த மாதம் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்ட பிறகு நடிகை ஷெர்லின்சோப்ரா அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். அவரது குற்றச்சாட்டில் 2019-ஆம் ஆண்டு ராஜ்குந்த்ரா என் மேனேஜரை தொடர்புகொண்டு ப்ராஜக்ட் குறித்து பேச வேண்டும் என்றார். பின்னர், தொழில்முறையிலான சந்திப்பு நடைபெற்றது. அதையடுத்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி எனது வீட்டிற்கு வந்து, என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ராஜ்குந்த்ரா மீது கடந்த ஏப்ரல் மாதம் ஷெர்லின் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்ட பிறகு அவரது மனைவியும், நடிகையுமான ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் 6 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.