தொலைக்காட்சிகளில் அதிகமாக பேசப்படும் மற்றும் அதிகமான பார்வையாளர்களை கொண்ட சர்ச்சைக்குரிய ஒரு ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். தற்போது ஹிந்தி பார்வையாளர்களுக்காக பிக் பாஸ் 16-இல் போட்டியாளராக பங்கேற்றுள்ள சஜித் கான் பல கடுமையான Me Too குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார் என்பதால் பல சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பல நடிகைகள் மற்றும் மாடல்கள் சஜித்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். இவர் பாலிவுட்டில் ஹவுஸ்புல், ஹேய் பேபி போன்ற படங்களை இயக்கியவர் மற்றும் பல படங்களில் நடித்துள்ளார்.
சல்மான் கானுக்கு ஷெரின் வைக்கும் கோரிக்கை :
திரைப்பட இயக்குனர் சஜித் கான் மூலம் பாதிக்கப்பட்ட ஒருவரான ஷெர்லின் சோப்ரா, சஜித்தின் பிக் பாஸ் என்ட்ரி குறித்து மிகவும் வெளிப்படையாக தனது கோபத்தையும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சஜித் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். "சல்மான் கானுக்கு நெருக்கமான ஒருவராக இருந்தால் அல்லது தெரிந்த ஒரு பெண்ணாக இருந்தால் அவரை சஜித் கான் பாலியல் தொந்தரவு செய்திருந்தால் அவரை பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய அனுமதிப்பார்களா? என மிகவும் பகிரங்கமான தனது அனுபவங்களை பகிர்ந்தார் ஷெர்லின் சோப்ரா.
மாஃபியா கூட்டத்தை ஒழிக்க ஒன்றுபடவேண்டும்:
Me Too தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பலரும் மிகவும் ஒரு நல்ல இடத்தில் தான் இருக்கிறார்கள். இது ஒரு மாஃபியாவை போல் செயல்படுகிறது. இங்கே போதை பொருள் விற்பவர்கள், கற்பழிப்பவர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்கள், துஷ்பிரயோகம் செய்பவர்கள் என பலருக்கும் இங்கே வாய்ப்பளிக்கப்படுகிறது அனாதை பாதிக்கப்பட்டவர்கள் தங்களுது எதிர்காலத்தை நினைத்து அமைதியாக இருப்பதே சிறந்து என நினைப்பதால் இந்த மாஃபியா கூட்டத்தை என்றுமே அழிக்க முடியாது. அவர்களுக்கு எதிரான ஒரு சக்தியாக அனைவரும் ஒன்று பட்டால் மட்டுமே இதை வளர விடாமல் தடுக்க முடியும் என்பதை பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சர்ச்சைக்கு சல்மான் கான் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
சஜித் மீது ஷெரிலின் வைக்கும் குற்றச்சாட்டு :
மேலும் ஷெர்லின் கூறுகையில் "நான் மறுத்தும் பல முறை எனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு முறை படத்தின் கதை கேட்பதற்காக சஜித் வீட்டிற்கு சென்றபோது அவரின் ஆணுறுப்பை வெளிப்படுத்தி அதற்கு என்னை 0 முதல் 10 வரையில் ரேட்டிங் கொடுக்க சொல்லி வற்புறுத்தினர். அதற்காக நான் இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல ஆசை படுகிறேன். சஜித் என்னிடம் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் மதிப்பீட்டை கொடுங்கள். இதை எப்படி அவர் எதிர்கொள்கிறார் என்பதை இந்த இந்திய பார்க்கட்டும்" என்றார் ஷெர்லின் சோப்ரா.