இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனி ஓய்வுக்குபிறகு விவசாயம், இந்தியா சிமென்ட்ஸ் பங்குதாரர் என பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், எம். எஸ். தோனி தமிழ் திரைப்படங்களின் மேல் கொண்ட காதலால் தமிழ் திரைப்படங்களை தயாரிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. 


தோனி தனது நிறுவனத்திற்கு ’தோனி எண்டெர்டெயின்மெண்ட்’ என பெயர் வைத்துள்ளார். தோனி முதற்கட்டமாக தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அவரது நிறுவனம் திரைப்படங்களை தயாரிக்கும் என கூறப்படுகிறது. 


முன்னதாக கடந்த 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றதை மையமாக கொண்டு ‘Blaze to glory' என்ற படத்தையும், ‘The hidden hindu' என்ற பெயரில் புராணத்தை அடிப்படையாக கொண்ட திரில்லர் படம் ஒன்றையும் தோனியின் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தமிழ் திரைப்படம் : 


கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தோனி கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியது. அந்த திரைப்படத்தை தோனியே தயாரிக்க இருப்பதாகவும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாவும் கூறப்பட்டது. அதன் பிறகு தோனி தரப்பில் இருந்து இப்படியான செய்திகள் உண்மையில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது. 


இந்த சூழலில் தோனியின் தயாரிப்பில் விரைவில் தமிழ் திரைப்படம் ஒன்று உருவாக இருக்கிறது. இதற்காக முன்னனி நடிகர், நடிகைகளுடன் பேச்சுவார்த்தை தோனியின் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. இதற்காக தான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தோனி சென்னையில் நடிகர் விஜயை சந்தித்ததாக கூறப்படுகிறது. அந்த புகைப்படமும் இணையத்தில் படுவைரலானது குறிப்பிடத்தக்கது. இதேபோல், நயன்தாராவிடமும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது என்ற தகவலும் பரவியது. 


 2 படங்கள்: 


கடந்த 2016, 2017 ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்ட பிறகு, 2018 ம் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றது. அதை மையமாக வைத்து ஒரு தொடரும், எம்.எஸ், தோனி அண்டோல்ட் ஸ்டோரி தோனியை மையமாக வைத்து உருவானது. ஏற்கனவே, இயக்குநர் விக்னேஷ் சிவன் எடுத்த விளம்பர படம் ஒன்றில் தோனி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோ 'அதர்வா - தி ஆரிஜின்'  என்ற நாவலில் அதர்வா கதாபாத்திரத்தில் அனிமேஷன் வடிவில் நடித்திருந்தார். இதன் மூலம் எம்.எஸ். தோனி தமிழ் திரையிலகின் மீது எவ்வளவு காதல் வைத்திருக்கிறார் என்று தெரிந்திருக்கும். 


சூப்பர் ஹீரோவாகவும், போர்வீரர் தலைவராகவும் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியை தவிர வேறு யாரும் இதில் நடிக்கவில்லையாம். இந்த நாவலை ரமேஷ் தமிழ்மணி எழுதியுள்ளார். எம்.வி.எம். வேல் மோகன் தலைமையில், வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் அசோக் மேனர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து எம்.எஸ். தோனி தனது முகப்புத்தகத்தில் வெளியிட்ட பதிவில், “இந்த திட்டத்துடன் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையில் இது ஒரு அற்புதமான முயற்சி. அதர்வா - தி ஆரிஜின் நாவல் ஈர்ப்பு மிகுந்த கதை. அதிவேகமான கலைப்படைப்புகளுடன் வசீகரிக்கும் வகையில் இந்த கிராஃபிக் நாவல் உருவாகியுள்ளது. இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை சமகாலத் திருப்பத்துடன் வெளியிடும் எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் முயற்சி, ஒவ்வொரு வாசகருக்கும் மேலும் பலவற்றைத் தேடித் தரும்.”  என்றார்.