திருட்டு சம்பவங்கள் என்பது நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. பிக் பாக்கெட் அடிப்பது, வீட்டின் பூட்டுகளை உடைத்து திருடுவது என பல்வேறு வகைகளில் அது நடைபெற்று வருகின்றன. சாதாரண பொதுஜனங்களிடம் நடைபெறுவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், விஐபியிடம் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது அரிதே.
இந்நிலையில், திருட்டு சம்பவத்திற்கு இரையாகி இருக்கிறார் இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். அவர் வேறு யாரும் அல்ல முன்னாள் மத்திய உள்துறை மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே. இவர், மகாராஷ்டிர முதலமைச்சரவாகவும் இருந்துள்ளார்.
சுஷில் குமார் ஷிண்டேவின் மொபைல் போனை திருடியதாகக் கூறி, அக்டோபர் 6ஆம் தேதி கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றக் காவலுக்கு இன்று அனுப்பப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் மந்தர் பிரமோத் குரவ் என அடையாளம் காணப்பட்டு, அரசு ரயில்வே காவல்துறையால் (ஜிஆர்பி) கைது செய்யப்பட்டு இப்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவரான மந்தர், சுஷில் குமார் ஷிண்டேவின் முன்னாள் தொகுதியான சோலாப்பூரில் வசிப்பவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மூத்த காங்கிரஸ் தலைவரான சுஷில் குமார் ஷிண்டே மும்பைக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவரது மொபைல் போனை கௌரவ் திருடியதாக கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் ஷிண்டேவுடன் அவர் பயணித்த ரயில் பெட்டியில் பயணம் செய்துள்ளார். ஷிண்டே தாதர் ஸ்டேஷனை அடைவதற்கு முன் கழிப்பறைக்குச் செல்வதற்காக தனது தொலைபேசியை இருக்கையில் வைத்திருக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட மந்தர் அவரின் மொபைல் போனை திருட முயன்றனர்.
அவரது மகள் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளார். பின்னர், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் அக்டோபர் 6-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.