இந்தியாவில் புகழ் பெற்ற பாலிவுட் நடிகைகளில் ஒருவர் ஷெர்லின் சோப்ரா. இவர் ஒரு மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைப்படங்களுக்குள் நுழைந்தார். இப்படி இருக்கும் போது சர்வதேச இதழ் ஒன்றுக்கு ஆடையில்லாமல் போஸ் கொடுத்து பலரின் கவனத்தை ஈர்த்தார். அந்த போட்டோ ஷூட் இவருடைய வாழ்க்கையை மாற்றியது. அந்த போட்டோ ஷூட் தொடர்பாக இவர் சில கருத்துகளை கூறியிருந்தார். 


 ஷெர்லின் சோப்ரா 38ஆவது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் எவ்வாறு தன்னுடைய திரைப்பாதை மற்றும் விமர்சனங்களை கடந்து வந்தார் என்பது தொடர்பாக ஒரு கருத்தையும் கூறியுள்ளார். 



sherlyn Chopra | இந்தியாவிலேயே முதல் நிர்வாண போஸ்.. ப்ளேபாய் இதழை அசரடித்த ஷெர்லின் சோப்ரா!!


அதன்படி சிறு வயது முதல் இவர் தன்னுடைய படிப்பில் ஆர்வம் செலுத்தி வந்துள்ளார். அதன்பின்னர் 15 வயது முதல் இவருக்கு தோற்றின் மீது அதிக ஆர்வம் எழுந்துள்ளது. அதைத் தொடர்ந்து ஒரு மாடல் அழகியாக வலம் வர வேண்டும் என்று நினைத்துள்ளார். இதற்காக கடினமாக உழைத்து மிஸ் ஹைதராபாத் பட்டத்தை வென்றுள்ளார். 


 


இப்படி மாடல் அழகியாக உருவெடுத்து கொண்டிருக்கும் போது இரண்டு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தப் படங்களில் சற்று கவனம் பெற்றார். இதற்கு பிறகு டைம் பாஸ் என்ற திரைப்படத்தில் ஜென்னி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். 


இதைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு ப்ளேபாய் இதழுக்கு நிர்வாணமாக போஸ் கொடுக்கும் வாய்ப்பு இவருக்கு வந்துள்ளது. அப்போது பலரும் தயங்கும் இந்த போட்டோ ஷூட்டிற்கு ஷெர்லின் எந்தவித தயக்கும் இன்றி போஸ் கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் எந்த ஒரு இந்தி நடிகையும் நிர்வாணமாக ஒரு இதழுக்கு போட்டோ ஷூட் செய்ததில்லை. இதன்காரணமாக அவரது புகழ் ரசிகர்களிடம் அதிகம் பரவியது. 


 


மேலும் இந்த போட்டோ ஷூட்டிற்கு பிறகு இவர் மீது பல விமர்சனங்கள் வந்தன. அத்துடன் பலரும் இவர் தொடர்பாக பல கருத்துகளை முன்வைத்து வந்தனர். எனினும் அவை எதையும் பொருட்படுத்தாமல் இவர் தன்னுடைய வேலையை செய்தார். அத்துடன் இவர் மீது பல ஆன்லைன் ட்ரோல்களும் வந்துள்ளது. இவை அனைத்தையும் அவர் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்ததாக கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற விஷயங்களை அவர் எப்போதும் மன தைரியத்துடன் இதை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க: 'நச்சுன்னு நாலு ஸ்டெப்பு'... கச்சா பாதம் பாடலுக்கு பட்டையைக் கிளப்பிய 'பாரதி கண்ணமா' ரோஷினி !