Roshini haripriyan video : 'நச்சுன்னு நாலு ஸ்டெப்பு'... கச்சா பாதம் பாடலுக்கு பட்டையைக் கிளப்பிய 'பாரதி கண்ணமா' ரோஷினி !

கச்சா பாதம் பாடலுக்கு 'பாரதி கண்ணமா' சீரியலில் கண்ணமாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

இந்தியாவில் அவ்வப்போது ஏதாவது வித்தியாசமான சம்பவங்கள் அல்லது பாடல்கள், நிகழ்வுகள் பிரபலமாவது வழக்கம். சமீபகாலமாக அவ்வாறு பிரபலமாகும் சம்பவங்களை டிக்டாக வாசிகள் தாங்களும் அதுபோன்று செய்து பிரபலமாக முயற்சிப்பதும், பின்னர் அது மீம்சாகவும், ட்ரோலாகவும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பயன்படுவது வழக்கமாகி வருகிறது.

Continues below advertisement

வட இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாம் விற்கும் வியாபாரி ஒருவர் பாதாமை விற்பதற்காக வித்தியாசமாக பாட்டு பாடி தனது பாதாமை விற்றுள்ளார். அவ்வாறு அவர் பாடிய கச்சாபாதம் என்ற பாடல் மிகவும் வைரலாகியது. சமூக வலைதளங்களில் வைரலாகிய அந்த வியாபாரியின் பாடல் வரியையே அடிப்படையாக கொண்டு கச்சா பாதம் என்ற ஆல்பம் சாங் வெளியாகி மாபெரும் வைரலானது. 1 மாதத்திற்கு முன்பு வெளியான இந்த பாடலை கிட்டத்தட்ட நாற்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் யூ டியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். 

சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாகவே இந்த கச்சா பாதம் என்ற பாடல் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு பிரபலங்கள், டிக்டாக், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நடனமாடி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ' பாரதி கண்ணமா' சீரியலில் முன்னாள் கண்ணமாவாக நடித்த ரோஷினி ஹரிப்ரியன் நடனமாடி உள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் அதை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். 

முன்னதாக, 'பாரதி கண்ணம்மா' சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியனின் நடிப்பு சீரியல் இல்லத்தரசிகளை கட்டி இழுத்தது.

இந்நிலையில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியனின் சில மாதங்களுக்கு முன்பு அதிலிருந்து விலகினார். இதற்கு காரணம் சினிமா வாய்ப்புகள் அவரை தேடி வந்தது என்று சொல்லப்பட்டது. இருப்பினும் அவர் எந்த படத்திலும் நடிக்கப்போவதாக இது வரை அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement
Sponsored Links by Taboola