#MeToo புரட்சி சினிமா உலகில் நல்ல மாற்றத்தை கொண்டுவந்துள்ளதாகவும், மயக்கும் வார்த்தைகள் கூறி ஏமாற்றாமல் அடுத்தவரின் விருப்பத்தின் முக்கியத்துவத்தை முன்நிறுத்துவதாகவும் திரைப்பட இயக்குனர் சேகர் கபூர் நம்புகிறார்.


மீ டூ இயக்கம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது


இந்த இயக்கம் சினிமாத் துறையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, பெண்களின் நம்பிக்கையை மேம்படுத்துகிறது. மேலும் குழந்தை நடிகர்களுக்கு அதிக வரவேற்பு அளிக்கும் பாதுகாப்பான இடமாக மாற்றுகிறது என்று சேகர் கபூர் கருதுகிறார். பாண்டிட் குயின் மற்றும் மிஸ்டர் இந்தியா போன்ற அவரது திட்டங்களில் அவர் வலுவான பெண் கதாபாத்திரங்களை சித்தரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. "மயக்கும் வார்த்தைகள் காதல் மொழியாகக் கருதப்பட்ட ஒரு காலம் இருந்தது, அது சினிமா உலகிலும் பிரதிபலித்தது. #MeToo இயக்கம் அதைத் துடைத்துவிட்டது, இது ஒரு பெரிய மாற்றம். பாலியல் எண்ணம் கொண்டு பெண்ணை மயக்க வேண்டும் என்று எண்ணும் காலம் இருந்தது. இப்போது அதனை செய்யவிடாமல் 'மீ டூ' தடுத்துள்ளது,"என்று திரைப்பட இயக்குனர் சேகர் கபூர் கருதுகிறார்.



இழிவான எண்ணம் இப்போது இல்லை


இதுகுறித்து விரிவாகக் கூறிய சேகர் கபூர், “இப்போது, அந்த இழிவான எண்ணம் இல்லை, ஒரு ஆணைப் போலவே பெண்ணும் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார். ஒருமித்த விருப்பம் முக்கியத்துவம் அடைந்துள்ளது. பெண்கள் கூச்ச சுபாவமுள்ளவராக இருக்க வேண்டும், அவருடைய கூச்சத்தில் இருந்து அவரை மயக்க வேண்டும் என்ற எண்ணங்களை இப்போது MeToo உடைத்துவிட்டது. இப்போது அதை யாரும் முயற்சிப்பதில்லை என்று நினைக்கிறேன்," என்று கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: Video Viral : மெட்ரோ ஸ்டேஷனுக்கு கவர்ச்சி உடையில் வந்த பெண்.. நிர்வாகம் கொடுத்த அறிவிப்பு.. நடந்தது என்ன?


முழு சினிமா துறைக்கும் நல்லது


கபூர், தனது ஹாலிவுட் திரைப்பட திட்டமான, "What’s Love Got to Do with It?" மூலம் சினிமா உலகிற்கு மீண்டும் வந்தவர். அவர் #MeToo இயக்கம் சினிமா உலகில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக உணர்கிறார். "இது முழு சினிமாத் துறைக்கும் ஒரு நல்ல இயக்கமாக இயங்கி வருகிறது, மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. முன்பு பயன்படுத்திய ஆசை வார்த்தைகள் தற்போது செயல்படாது. உதாரணமாக, நான் மசூம் (1983) படத்தில் பணிபுரிந்தபோது, குழந்தை நட்சத்திரத்தை தேடி வெளியே சென்றபோது, நான் பேசிய அனைவருமே சினிமாத்துறையில் நுழைய விரும்பவில்லை. அவர்கள் எங்களை நம்பவில்லை. இங்கு பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்த அச்சம் அவர்களுக்கு இருந்தது", என்கிறார்.



நல்ல பெண் கதாபாத்திரங்களை உருவாக்கியவர்


"பெண்கள் சரியாக நடத்தப்படவில்லை என்ற பொதுப்பார்வை இருந்தது. பெண்களை நாம் பார்க்கும் விதம் தவறானது. இப்போது அது மாறிவிட்டது, ”என்று திரைப்பட இயக்குனர் கூறுகிறார். சேகர் கபூர் தனது சினிமாக்களில் பெண்களை எப்படி காட்சிப்படுத்துவது என்பதில் தெளிவாக இருக்கிறார். பாண்டிட் குயின் (1994), மிஸ்டர். இந்தியா (1987), What’s Love Got to Do with It?, ஆகிய திரைப்படங்களில் அவர் இதனை செய்துள்ளார். "என்னுடைய ஒவ்வொரு திட்டத்திலும், நான் மிகவும் வலிமையான பெண்ணைக் காட்டியிருக்கிறேன்," என்று அவர் பெருமையுடன் கூறுகிறார்.