நடிகை சாந்தி பிரியா சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் சரோஜினி என்ற பெயரில் வரவிருக்கும் வாழ்க்கை வரலாற்று படத்தில் சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடுவாக நடிக்க இருப்பதாக அறிவித்தார். ஒரு நீண்ட இடுகையில், சாந்தி அத்தகைய பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதில் தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரது இன்ஸ்டா பதிவில், “வணக்கம். இன்று இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் மதிய வணக்கம். உண்மையைச் சொல்வதானால், நான் தற்போது சொல்ல வார்த்தையில்லாம் இருக்கிறேன். ஆனால் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில், தடைகளை உடைப்பதில் மற்றும் சுதந்திரத்துக்காகப் பெரும் பங்கை ஆற்றிய ஒரு வலிமையான மற்றும் லட்சியமான பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது."
அவர் மேலும் கூறுகையில், “என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன், நம் இந்திய வரலாற்றில் உலகம் பெருமையுடன் ’தி நைட்டிங்கேல் ஆஃப் இந்தியா’ என்று அழைக்கும் பெண்ணின் பாத்திரத்திற்கு நியாயம் செய்ய அனைத்து வகையிலும் உழைப்பேன். தனிப்பட்ட முறையில் சொன்னால், நான் இன்னும் ஒரு நடிகராக இதுபோன்ற முக்கியமான பாத்திரங்களுக்கு என்ன கொண்டு வர முடியும் என்பதை முயற்சி செய்ய ஆவலாக உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.
இது குறித்து இயக்குனர் வினய் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது எனக்கு மட்டுமல்ல, சரோஜினி நாயுடுவின் சுவாரசியமான கதைக்கான பயணம். விசிகா பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை சரண் சுவர்ணா மற்றும் ஹனி சவுத்ரி ஆகியோர் தயாரிக்க உள்ளனர் மற்றும் ஹேமந்த் கவுடா இணைந்து தயாரிக்கிறார்’ என்றார்.
சாந்தி பிரியா கடைசியாக 1994 இல் ’இக்கே பே இக்கா’ என்கிற திரைப்படத்தில் காணப்பட்டார்.