தமிழ் சினிமாவில் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்துள்ள பிரமாண்டமான இயக்குனர் ஷங்கர். அவரின் மகள் அதிதி தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். படத்திற்கு படம் வித்தியாசங்களை அள்ளி கொடுக்கும் நடிகர் கார்த்தியின் ஜோடியாக விருமன் திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். சூர்யா & ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நடிகர், நடிகைகள், இயக்குநர் என அனைவருமே தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். முன்னதாக, விருமன் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகர் சூர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் விருமன் பட புது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது. அது அதிதி பாடிய மதுர வீரன் பாடல்தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.
தமிழ் சினிமாவிலும் தனது முதல் டூயட் பாடலைவிருமன் படத்தில் பாடியுள்ளார் அதிதி ஷங்கர். யுவன் இசையில் விருமன் திரைப்படத்தில் "மதுர வீரன்" என்ற டூயட் பாடலை யுவன் ஷங்கர் ராஜாவோடு சேர்ந்து பாடியுள்ளார். ஆனால் இந்த பாடலை முதலில் பாடியவர் விஜய் டிவி புகழ் ராஜலட்சுமி என்றும், அவரது குரலை நீக்கிவிட்டு மீண்டும் அதிதி வைத்து இந்த பாடலை ரெக்கார்ட் செய்து யுவன் வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இணையத்தில் பரவும் தகவலைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள சிலர் யுவன் ஏன் இந்த முடிவை எடுத்தார் எனக்கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேவேளையில் பாடகர்களை மாற்றுவது, வரிகளை மாற்றுவதெல்லாம் சினிமாவில் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான் என்றும், ராஜலட்சுமி தரப்பே எதுவும் இதுவரை வாய்திறக்காத நிலையில் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த தேவையில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாவதற்கு முன்னரே பாடகியாக அறிமுகமாகிவிட்டார். இயக்குனர் கிரண் கொரப்படி இயக்கத்தில் இசையமைப்பாளர் s. தமனின் இசையில் கானி எனும் படத்தில் ரோமியோ ஜூலியட் என்ற ரொமான்டிக் பாடலை பாடியுள்ளார்.