Game Changer : ஷங்கரின் கேம் சேஞ்சர் ரிலீஸ் ஒத்திவைப்பு...புதிய ரிலீஸ் தேதி இதுதான்
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் தேதி வரும் டிசம்பர் மாதம் வெளியாக இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி ஒத்திவைகப்பட்டுள்ளது

கேம் சேஞ்சர்
இந்தியன் 2 படத்திற்கு பின் ஷங்கர் இயக்கத்தில் அடுத்தபடியக ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் படம் கேம் சேஞ்சர். ராம் சரண் நாயகனாக நடிக்க கியாரா அத்வானி , எஸ்.ஜே சூர்யா , அஞ்சலி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜூ இப்படத்தை தயாரித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் மூலம் ஷங்கர் கம்பேக் கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தார்கள். வரும் டிசம்பர் 20 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக படக்குழு சார்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
Just In




இதன்படி 2025 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி கேம் சேஞ்சர் படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் இதுகுறித்து படக்குழு சார்பாக விளக்க கொடுக்கப்படும் என எதிர்பார்க்கலாம்