மறைந்த பாடகர் கே.கே அவர்களின் திடீர் இழப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் என யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முறையாக சங்கீதம் கற்காத கே.கே என்னும் கிருஷ்ணகுமார் குன்னத் கோலிவுட் , பாலிவுட் என பாடிய சூப்பர் ஹிட் பாடல்கள் ஏராளம். இந்த நிலையில் அவருடைய நெருங்கிய நண்பரும் சக பாடகருமான சங்கர் மகாதேவன் , கே.கே குறித்து பல நெகிழ்ச்சியான விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்.
திரைத்துறை கடந்த நட்பு :
கேகே பற்றி சங்கர் மகாதேவன் பேச துவங்கும் பொழுது “ கே.கேவை கடந்த காலமாக பேசுவதை என்னால் நம்ம முடியவில்லை. “ என்றார். மேலும் பேசிய அவர் “திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பே நாங்க இருவரும் நீண்ட காலமாக தொடர்பில்தான் இருந்தோம். அவர் என்னோட நல்ல நணபர் . நாங்கள் இருவரும் ரொம்ப காலமாக ஒரு கேங்காக இருந்தோம் . நாங்கள் இருவரும் இணைந்து பாடிய ஜிங்கிள்ஸ் பாடல் பின்னர் படத்தில் இடம்பெற்றது. அவற்றுள் ஒன்றுதான் “தில் சஹ்தா ஹை, கோயி கஹே”.
கே.கே-விற்கு வயதாகவில்லை :
கேகே ஸ்டூடியோவிற்குள் நுழந்தாலே ஒரு புது பாசிட்டிவ் ஆற்றல் பிறக்கும் என்ற சங்கர் மகாதேவன் . தொடந்து அவர் குறித்து பகிர தொடங்கினார். ” கேகே மணிக்கணக்கில் அரட்டை அடிப்பார்.சில மாதங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரை பார்த்து நாங்கள் எல்லோரும் “பெஞ்சமின் பட்டன் போல இருக்கிறீர்கள்,” என்றோம். உங்களுக்கு மட்டும் எப்படி தலைகீழாக வயதாகிறது என கிண்டலாக பேசினோம், அவ்வளவு ஹேண்ட்ஸமாக இருந்தார்.
வாட்ஸ்அப்பில் கூட இல்லை :
இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் செலுத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் கே.கே அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லாமல் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டார் என்கிறார் சங்கர் மகாதேவன். அவர் கூறுகையில் “ கே.கே பாடிய பாடலுக்கு எத்தனை லைக்ஸ் வந்துருக்குனு கூட அவருக்கு தெரியாது. அவர் சோஷியல் மீடியாவில் இல்லவே இல்லை. இவ்வளவு ஏன் , அவருக்கு ஒரு வாட்ஸப் நம்பர் கூட கிடையாது. அவரை தொடர்புக்கொள்ள வேண்டுமென்றால் மொபைல் அழைப்புதான் செய்யனும். அவர் வேலை முடிந்தது குடும்பத்துடன் நேரம் செலவிடத்தான் அதிகம் விரும்புவாரு. குடும்பத்தை பற்றிதான் அதிகம் பேசுவார்.
விருதுகளே கிடைக்கவில்லை :
”கேகே வாழும் பொழுதே ஒரு மாபெரும் கலைஞன். ஆனால் அவருக்கு இதுநாள் வரையில் எந்த விருதும் கிடைக்கவே இல்லை.அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அவன் செய்வதை மட்டும் ரசித்தார்.கச்சேரிகளுக்கு செல்வதில்தான் அவரது கவனம் இருந்தது “ என்றார் சங்கர் மகாதேவன்.