மகாராஷ்டிர மாநிலத்தில் 30 வயதான பெண் ஒருவர் தனது கைக்குழந்தை மற்றும் இரண்டு வயது மகன் இடைவிடாமல் அழுததற்காக கொன்று எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 30 வயதான துர்பதாபாய் கன்பத் நிமல்வாட் தனது கைக்குழந்தை மற்றும் இரண்டு வயது மகனை இடைவிடாமல் அழுததற்காகக் கொலை செய்து அவர்களின் உடல்களை ஒரு வயலில்வைத்து  எரித்ததாகக் காவல்துறையினர் அதிர்ச்சிகர தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். 


இதுகுறித்து காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட பெண் துர்பதாபாய் கன்பத் நிமல்வாட், குழந்தைகளின் உடல்களை அப்புறப்படுத்த உதவிய அவரது தாய் மற்றும் சகோதரருடன் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். 




இக்கொலைகள் மாவட்டத்தின் போகர் தாலுகாவின் பாண்டுர்னா கிராமத்தில் அடுத்தடுத்த இரண்டு நாட்கள் (மே 31 மற்றும் ஜூன் 1) ஆகிய தேதிகளில் நடந்துள்ளது என்றார். மே 31 ம் தேதியன்று துர்பதாபாய் தனது நான்கு மாத மகள் அனுசுயாவை கைகளில் வைத்துள்ளார். அப்பொழுது, அந்த குழந்தை வெகுநேரமாக நிறுத்தாமல் அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் கோவமடைந்து தனது நான்கு வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 


அதற்கு அடுத்த நாள் துர்பதாபாய் கன்பத் நிமல்வாட்டிடம் அவரது மற்றொரு மகனாக தத்தா பசிக்குது என்றும் உணவு வேண்டும் என்றும் கேட்டு அழுதுள்ளார். மீண்டும் கடுப்பான அந்த பெண் தனது மகனையும் அதேபோன்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தொடர்ந்து, எங்கே இந்த விஷயம் வெளியே தெரிந்தால் சிறைக்கு சென்றுவிடுவோமோ என்ற பயத்தில் அந்த பெண் தனது தாய் கோண்டாபாய் அஜேமோத் மற்றும் சகோதரர் மாதவ் ராஜேமோத் ஆகியோரின் உதவியுடன் ஒரு வயலில் குழந்தைகளின் உடலை எரித்துள்ளனர். 


இந்த விஷயம் எப்படியோ காவல்துறையினர் காதுகளுக்கு சென்றுவிட குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் இந்திய தண்டனைச் சட்டம் C இன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண..