பாலிவுட் சினிமாவின் கிங் கான் என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் சினிமா துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். கோடிக்கணக்கான ரசிகர்களின் நாடி துடிப்பாய் இருந்து வருகிறார். ஒரு சிறிய பிரேக் எடுத்து கொண்டவர் சமீபத்தில் வெளியான பதான் திரைப்படம் மூலம் ராக்கிங் என்ட்ரி கொடுத்துள்ளார். தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் இணைந்து நடித்த இப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றதோடு வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டுவருகிறது.
பல ஆண்டுகாலமாக ரசிகர்களின் விருப்பத்தை நன்கு அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு படங்களை தேர்வு செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதில் சிறந்த என்டர்டெய்னராக விளங்குபவர் நடிகர் ஷாருக்கான். பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் அவரிடம் "நீங்கள் இதுவரையில் நடித்த கதாபாத்திரங்களில் ஏதாவது மோசமான அல்லது வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்தது குறித்து என்றாவது ஒரு நாள் வருத்தப்பட்டு உள்ளீர்களா? இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு ஒரு தவறான உதாரணமாக என்றாவது தோன்றியுள்ளதா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷாருக்கான் இந்த கேள்வியை நான் தவறு என்று சொல்வேன். நான் சினிமா மூலம் மெசேஜ் கொடுக்க வரவில்லை. அது தபால் சர்வீஸ் செய்பவர்கள் வேலை. நான் இங்கு உங்களை என்டர்டெயின் செய்வதற்காக இருக்கிறேன். இதை நீ செய்ய வேண்டும் இதை நீ செய்யக்கூடாது என நான் சொல்ல போவதில்லை. ஏன் என்றால் நானே மிகவும் நல்ல மனிதன் கிடையாது. நான் அடுத்தவர்களை ஜட்ஜ் செய்ய முடியாது. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்யவேண்டும் எப்படி கடந்து போக வேண்டும் என நான் சொல்ல கூடாது. என்னிடம் யாராவது நீ இப்படி தான் உன் வாழ்க்கையை நடத்த வேண்டும் என அறிவுரை கூறினால் நான் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். எண்டர்டெயின்மெண்ட் என்றால் நீங்கள் சென்று படத்தை அனுபவித்து ரசிக்க வேண்டும். உங்களை நீங்கள் சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம். ஒரு புகழ் பெற்ற மனிதர் ஏற்கனவே சொன்னதை போல திரைப்படங்கள் ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே. மெசேஜ்களை போஸ்டல் சர்வீஸ் தான் செய்ய வேண்டும்" என்றார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் ஷாருக்கானின் கருத்து என்னவாக இருந்ததோ அதில் சிறிதும் மாற்றமில்லை. இன்றும் என்டர்டெயின்மென்ட் குறித்த அதே கருத்தை தான் பதிவிட்டுள்ளார். ஷாருக்கானின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அடுத்ததாக அட்லீ இயக்கும் 'ஜவான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். பதான் படத்தின் அபாரமான வெற்றிக்கு பிறகு மீண்டும் அவரை திரையில் காண மிகவும் ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.