பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் 57-வது பிறந்தநாளையொட்டி திரையுலக பிரபலங்கள், அவர்களின் பொன்னான வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


1992 ஆம் ஆண்டில் தீவானா என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்தார். 1995 ஆண்டு வெளியான “தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே” அனைவருக்கும் பிடித்தமான பாடமாக அமைந்தது. பின்னர், “தில் சே” என்ற படம் தமிழில் “உயிரே” என டப் செய்யப்பட்டு வெளியானது. இன்றளவும் அந்த படத்தில் உள்ள பாடல்களை பலரும் கொண்டாடி வருகின்றனர்.


அதிதி ராவ் : 






அனிருத் ரவிசந்தர் : 






ராஷ்மிகா மந்தானா :






ஸ்டுடியோ கிரீன் :






இன்று பாலிவுட் நாயகன் ஷாருக்கான், தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையடுத்து, அதிதி ராவ், அனிருத், ராஷ்மிகா ஆகிய பல சினியுலக பிரபலங்களும், ஸ்டுடியோ கிரீன் போன்ற தயாரிப்பு நிறுவனங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


"ராஜா ராணி", "தெறி", "பிகில்", "மெர்சல்" என அடுத்தடுத்து பிளாக் பஸ்டர் திரைப்படங்களாக கொடுத்து வரும் இயக்குநர் அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தீபிகா படுகோன் நடிகையாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.