Share Market : இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளன.


இன்று காலை தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 140.05 புள்ளிகள் குறைந்து 60,980.85 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 36 புள்ளிகள் குறைந்து 18,109.40 புள்ளிகளாக உள்ளது.






அமெரிக்க மத்திய வங்கி, தனது வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.


லாபம்- நஷ்டம்


சோழா இன்வெஸ்ட், ஜிண்டால் ஸ்டீல், ஹிண்டால்கோ, சன் டிவி நெட்வொர்க், ஹிட் காப்பர், டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், எச்டிஃப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.


எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், பிஎன்பி, வால்டஸ்,  அப்போலா, டைட்டன் கப்பெனி, அதானி போர்ட்ஸ், மாருதி சுசுகி, ஏர்டெல், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன


ஃபெடரல் வங்கி:


அமெரிக்க மத்திய வங்கியின் அலுவல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. நேற்று அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் முடிவடைந்த நிலையில், கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்த வாய்ப்பு இருக்கும். அதனால் இந்திய பங்குச் சந்தை இன்று சரிவுடன் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


மீண்டும் உயருமா வட்டி விகிதம்?


மேலும், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ரஷ்யா - உக்ரைன் போர், கொரோனா தொற்று காரணமாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. இதனால் உலகளவில் பணவீக்கம் அதிகரித்தது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, அமெரிக்காவின் மத்திய வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறினர். இந்நிலையில் இன்று பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி இருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியுடன் உள்ளனர்.


தற்போது சீனாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கச்சா எண்ணெய் தேவையானது உலகளவில் குறைய வாய்ப்புள்ளதால், கச்சா எண்ணெய்யின் விலை குறையும் சூழல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ரூபாய் மதிப்பு நிலவரம்