வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஓரிரு தினங்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.


அடுத்த 2 மணி நேரம் :


இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 2 மணிநேரத்திற்கு உள்ளாக வண்டலூர், பொன்னேரி, குன்றத்தூர், பூந்தமல்லி, திருப்போரூர், கும்மிடிப்பூண்டி மற்றும் உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரியவருகிறது




சென்னை மாநகரில் ஆலந்தூர், அமைந்தகரை, அயனாவரம், செய்யூர், எழும்பூர், கிண்டி, மதுராந்தகம், மதுரவாயல், மாம்பலம், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், திருக்கழுக்குன்றம், திருவள்ளூர், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வேளச்சேரி, அம்பத்தூர் மற்றும் மாதவரம் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


பள்ளி, கல்லூரி விடுமுறை : 


கடும் மழை காரணமாக சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பை கருத்தில் கொண்டு பணிக்கு செல்வோர்கள் குடை மற்றும் மழை உடை ஆகியவற்றுடன் ஆயத்த நிலையில் பணிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




முன்னதாக, நேற்று முன்தினம் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர். மாநகராட்சி பணியாளர்கள் துரிதமாக பணிகளை மேற்கொண்டு தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பொதுமக்கள் கவனத்திற்கு :


மழைக்காலத்திற்கான அத்தியாவசிய பாதுகாப்பு குறிப்புகள்


 ~ மின் கம்பிகளைத் தொடாதே.  ...


 ~ மழையில் நடப்பதை தவிர்க்கவும்.  ...


 ~ கொசுக்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும்.  ...


 ~ மெதுவாகவும் கவனமாகவும் வாகனங்களை ஓட்டுங்கள்.  ...


 ~ இடி புயலின் போது எலக்ட்ரானிக் சாதனங்களை துண்டிக்கவும்...


 ~ ஒரு குடை மற்றும் ரெயின்கோட் கையில் வைத்திருங்கள்.  ...


 ~ அவசரகாலப் பெட்டியைத் தயாரிக்கவும்.


 கனமழை மற்றும் இடியின் போது மரத்தடியில் நிற்க வேண்டாம்...


 ~ தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகள் மற்றும் அறிமுகமில்லாத சாலைகளில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும்...


 ~ உபகரணங்கள் மற்றும் கியர்களின் சரியான வேலை நிலைமைகளை உறுதிப்படுத்தவும்..



 அவசர சேவைகள்
 1. ஆம்புலன்ஸ்- 108/102
 2. தீயணைப்பு சேவை- 101
 3. போலீஸ்- 100