பாலிவுட் தாண்டி ரசிகர்களை தன்வசப்படுத்தி தன் திறைமையாலும் கரிஸ்மாவாலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை உலகம் முழுவதும் பெற்றிருப்பவர் ஷாருக்கான்.


ஸ்டைல் ஐகான்!


படங்கள் தாண்டி ஆஃப் ஸ்க்ரீனிலும் எப்போதுமே லைக்ஸ் அள்ளும் ஷாருக்கிடம் அவர்களது ரசிகர்கள் பொதுவாகவே ரசித்துக் கொண்டாடும் மற்றொரு விஷயம் அவரது ஸ்டைல்.


தற்போது 57 வயதாகும் ஷாருக்கான் தன் ஸ்டைலில் இன்று வரை எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தன் அனைத்து பொது நிகழ்வுகளிலும் துள்ளலாக வலம் வந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.


திகைக்க வைத்த வாட்ச்!


அந்த வகையில், முன்னதாக பதான் பட வெற்றி நிகழ்வு ஒன்றில் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்ட ஷாருக்கான் கருப்பு நிற கோட் சூட்டில் டிப் டாப்பாக வந்திருந்தார். ஆனால் ஷாருக்கின் ஸ்டைலிஷ் உடையைக் காட்டிலும் அங்கிருந்தோரின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது அவரது நீல நிற வாட்ச்!


முன்னதாக நடிகை தீபிகா படுகோனுடன் இணைந்து பதான் பட ப்ரொமோஷனுக்காக வீடியோ பகிர்ந்த ஷாருக், தன் வெள்ளை நிற ஷர்ட் உடனும் இதே ப்ளூ வாட்சை அணிந்து வந்து கவனமீர்த்தார்.




இந்நிலையில் இந்த வாட்ச்சால் ஈர்க்கப்பட்டு அதுகுறித்த ஆராயப்போய் வாயைப் பிளந்தபடி அமர்ந்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்!


வாட்சுக்கு இத்தனை கோடிகளா...


இந்த வாட்ச் குறித்து இன்ஸ்டாகிராமில் ஃபேஷன் பிளாகர்களிடம் ஷாருக் ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில்,
இது Audemars Piguet எனும் விலை உயர்ந்த பிராண்ட் எனத் தெரிய வந்தது.


மேலும், இந்த நிறுவனத்தின் பிரதேய பிராண்டான இந்த வாட்ச் ₹4.98 கோடி  Chrono24 இணையதள விவரங்களின்படி இந்த வாட்ச் ₹4.7 கோடிக்கு விற்பனையாகிறது எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


மும்பையில் கடலை நோக்கி அமைந்துள்ள ஷாருக்கின் மன்னத் இல்லம் தான் அவரது  உடமைகளிலேயே மிகவும் விலை உயர்ந்தது. 400 கோடி மதிப்புள்ள இந்த வீட்டை சொந்தமாகக் கொண்டிருக்கும் ஷாருக்குக்கு டெல்லியில் சொகுசு இல்லம் உள்ளது.


புலம்பும் நெட்டிசன்கள்!


மேலும் பிஎம்டபிள்யூ 6 சீரிஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஆடி உள்ளிட்ட கார்களையும் கொண்டு விலை உயர்ந்த பிராண்ட்கள் விரும்பியாக வலம் வரும் ஷாருக்கின் இந்த 4.7 கோடி மதிப்புள்ள வாட்ச் தான் தற்போது டாக் ஆஃப் த பாலிவுட் டவுன்!


இந்நிலையில் ஒரு வாட்சுக்கு இத்தனை கோடிகளா என தெரிவித்து, அங்காலாய்த்து பெருமூச்சு விட்டு வருகின்றனர் பாலிவுட் ரசிகர்கள்.


 






பதான் படம் ஒருபுறம் பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கி வசூலித்து வரும் நிலையில், அடுத்ததாக அட்லியின் ஜவான், ராஜ்குமார் ஹிரானியின் டன்கி ஆகிய படங்களில் வெற்றிக் களிப்புடன் பிசியாகியுள்ளார் ஷாருக்கான்.