கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த  மரநாட்டைச் சேர்ந்தவர் விஜயகுமார் (68). இவர் முதுமை காரணமாக பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் தன் உடல் உபாதைகளால் கடந்த சில நாட்களாக வேலைக்கும் செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.


சொந்த ஊரில் தனக்கு தானே சிதை


இந்த நிலையில் நேற்று முன்தினம் (பிப்.08) இரவு தனது குடும்ப வீடு அமைந்திருக்கும் புதூர் கிராமத்துக்குச் சென்ற விஜயகுமார், அங்கே தனக்கு சிதை மூட்டத் தொடங்கியுள்ளார்.  தொடர்ந்து அதில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.


இந்நிலையில், அருகேயுள்ள வீட்டில் வசித்து வந்த விஜயகுமாரின் சகோதரி, திடீரென வீட்டில் தீ கொழுந்து விட்டு எரிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.


தொடர்ந்து அங்கு விரைந்த விஜயகுமாரின் சகோதரி பின்னர் இன்னொரு நபரையும் துணைக்கு அழைத்து போராடி தீயை அணைத்தார். ஆனால் அது ஏதோ தானாக பிடித்துக்கொண்ட தீ என நினைத்து அவர் சென்று விட்ட நிலையில், தொடர்ந்து காலையில் சென்ற பார்த்தபோது அவரது சகோதரரின் விஜயகுமார் உடல் கருகிய நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.


கடிதம் எழுதி வைத்த முதியவர்


தொடர்ந்து காவல் துறையினருக்கு அளித்த தகவலின்பேரில் அங்கு வந்து அவர்கள் நடத்திய விசாரணையில், விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.


மேலும் விஜயகுமார் கைப்பட எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதம் ஒன்றும் காவல் துறையினரிடம் சிக்கியது. இந்நிலையில், இதில் வேறு ஏதேனும் மர்மம் உள்ளதா என காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


உடல் உபாதைகளால் முதியவர் தனக்குத்தானே சிதை மூட்டி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




வாழ்க்கையில் கவலைகளும் துன்பங்களும் வந்து கொண்டும் சென்று கொண்டும் தான் இருக்கும். அவற்றை எல்லாம் தற்காலிகமாக்குவதும் நிரந்தரமாக்குவதும் நாம் அவற்றை கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது.


வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறியத் தொடங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம் :104. சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060


மேலும் படிக்க: Crime : கோவை: ரூ. 33 லட்சம் மதிப்பு: தங்க நகைகளுடன் எஸ்கேப் ஆன நகைக்கடை தொழிலாளி: பறந்து சென்று பிடித்த காவல்துறை