பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் சென்ற ஆண்டு, அக்டோபர் மாதத்தில் மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்யப்பட்டு 20 நாள்களுக்கும் மேலாகச் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார். சொகுசுக் கப்பலில் ரெய்டு நடத்திய மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடேதான் ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்தார். ஆனால், அவர்மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்ததால் இந்த வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டு, போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் டெல்லி சிறப்பு விசாரணைக்குழு சஞ்சய் சிங் தலைமையில் விசாரணை மீண்டும் தொடங்கியது. 


குற்றப்பத்திரிகையில் பெயர் இல்லை


சஞ்சய் சிங் தலைமையிலான விசாரணைக்குழு சில வாரங்கள் முன்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகையில் ஆர்யன் கான் பெயர் இல்லை. ரெய்டின்போது ஆர்யன் கானிடம் போதைப்பொருள் எதுவும் பிடிபடவில்லை எனவும், அவர் போதைப்பொருள் பயன்படுத்தினார் என்பதை நிரூபிக்க மருத்துவப் பரிசோதனை கூட நடத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டதோடு இந்த வழக்கிலிருந்து ஆர்யன் கான் விடுவிக்கப்படுவதாகக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருந்தது.



விடுதலை ஆன ஆர்யன் கான்


பின்னர் போதுமான ஆதாரம் இல்லாததால் ஆர்யன் கான் மற்றும் 5 பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் கடந்த மே மாதம் விடுவித்தது. மேலும், அவரிடம் பெற்ற பாஸ்போர்ட்டை, மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என ஆர்யன் கான் தரப்பில் வாதிடப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஆர்யன்கான், பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டனர். அந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வந்து ஆர்யன் கான் மற்றும் ஷாருக்கான் தற்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கின்றனர்.


தொடர்புடைய செய்திகள்: கல்யாணத்துக்கு பிறகும் ஜீன்ஸ் பேன்டா? மனைவியிடம் சண்டையிட்ட கணவன் மர்ம மரணம்!


பார்ட்டியில் ஆர்யன் கான்


இந்நிலையில் பெரிதாக வெளியில் வராத ஆர்யன் காண பார்ட்டியில் இருப்பது போன்ற விடியோ வெளியானது. இன்ஸ்டாகிராமில் அவர் ஒரு பார்ட்டியில் இருப்பது போன்ற விடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. கருப்பு டி-ஷர்ட்டில் கேஷுவலக பாருக்கு வந்திருந்த அவர், ஓரிரு நொடிகள் மாஸ்கை இறக்கி விட்டு ஒரு ட்ரிங்கை குடித்து விட்டு கீழே வைப்பதை விடியோவாக அவரது ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 






வெளியில் தலை காட்டாத குடும்பத்தினர் 


ஆனால் இந்த பிரச்சனை ஆரம்பித்தது முதல் ஷாருக்கானின் குடும்பத்தினரை பெரிதாக வெளியில் பார்கமுடிவதில்லை. தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் முகம் காட்ட தொடங்கி உள்ளனர். கடந்த வாரம் தனது சகோதரி சுஹானா கான் நடிக்கும் ஜோயா அக்தர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சுஹானா கானை சந்தித்ததார்.


இயல்பு நிலைக்கு திரும்பும் குடும்பம்!


பிரச்சனைகள் முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் குடும்பத்தினர், திரைப்படம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். மகள் சுஹானா கான் படப்பிடிபில் உள்ள நிலையில், ஷாருக்கானின் ஜாவான் அறிவிப்பு வெளிவந்து வைரல் ஆனது. பதான் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.