ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் உலகளவில் 10 ஆயிரம் திரையரங்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 


ஜவான்:


ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் என சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ  ஜவான் படத்தை  இயக்கி உள்ளார். இந்தி திரையுலகில் அறிமுகமாகும் அட்லீ முதல் படத்தில், இந்தி மெகா ஸ்டாரான ஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, ஹாலிவுட்டை கலக்கிய தீபிகா படுகோனே, வில்லத்தனத்தில் கெத்து காட்டும் விஜய்சேதுபதி என மெகா கூட்டணியை வைத்து படத்தை இயக்கி உள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வந்த ஜவான் திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் நாளை திரைக்கு வருகிறது. 


முன்னதாக படத்தின் புரோமோஷனாக படக்குழு வெளியிட்ட ஒவ்வொரு பாடலுக்கும், கிளிம்ப்ஸ் வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டானது. கடந்த வாரம் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற ஜவான் பிரீ ரிலீஸ் விழாவில் ஷாருக்கான் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இந்த நிலையில் நாளை ஜவான் வெளியாக உள்ளதால் ஜவான் சுனாமி என்ற ஹேஷ்டேகை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். 






10 ஆயிரம் தியேட்டர்கள்:


இந்த சூழலில் ஜவான் திரைப்படம் உலகளவில் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் 5500 திரையரங்குகளிலும், வெளிநாடுகளில் 4500 திரையரங்குகளில் ஜவான் படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் ரிலீசானதில் இருந்து வார இறுதிக்குள் ரூ.50 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூலாகும் என கணிக்கப்பட்டுள்ளது. 


கடந்த 10ம் தேதி ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் 10 நாட்களில் ரூ.500 கோடியும், இதுவரை ரூ.600 கோடிக்கு மேலும் பாக்ஸ் ஆபிசில் வசூலாகி உள்ளது. ஜெயிலர் படம் வசூல் ரிதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தற்போது வெளியாக இருக்கும் ஜவான் ஜெயிலர் சாதனையை முறியடிக்குமா? படத்திற்கான வரவேற்பு எந்த அளவில் இருக்கும் என்ற விவாதமும் இணையதளத்தில் எழுந்துள்ளது. 


இதற்கிடையே ஜவான் ரிலீஸை ஒட்டி சிலம்பரம், மகேஷ் பாபு உள்ளிட்ட ரசிகர்கள் ஷாருக்கானிற்கும், அட்லீக்கும் வாழ்த்து கூறி வருகின்றனர். 






மேலும் படிக்க: Jawan : ஜவானில் கெளரவ தோற்றத்தில் விஜய்? மாஸ் ஹீரோக்களை எண்ட்ரியை பார்க்க காத்திருக்கும் ரசிகர்கள்..


Boycott Jawan : ஜவானை புறக்கணிக்க வேண்டும்... சமூக வலைதளத்தில் திடீரென்று ட்ரெண்டாகும் ஜவான் எதிர்ப்பு