ஷாருக்கானின் பதான் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவி நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.
ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் பதான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஷாருக்கான் திரையுலத்திற்கு வந்து 30 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக இந்த மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டருக்கு ரியாக்ட் செய்துள்ள ஷாருக்கானின் மனைவியான கெளரிகான், “கணவர், நண்பர், தந்தை என்பதை தாண்டி வெளியில் நீங்கள் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. நீங்கள் நேற்று உழைத்ததை விட இன்று அதிகமாக உழைக்கிறீர்கள்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தில் ஷாருக்கானுடன், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதேபோல நடிகர் ஷாருக்கான் இயக்குநர் அட்லீ இயக்கும் ஜவான் படத்திலும் நடித்து வருகிறார்.