Jawan Part2: ஜவான் முதல் பாகத்தின் கிளைமாக்ஸில் இடம்பெற்றுள்ள குறிப்புகளால் ஜவான் இரண்டாம் பாகும் எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஜவான்:
அட்லீ இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படம் இன்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ரிலீசுக்கு முன்பாக வெளியான ஜவான் படத்தின் பாடல்களும், கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டானது. ஜவான் படத்தின் ரிலீசை பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். ஸ்கிரீனில் பட்டையை கிளப்பும் ஷாருக்கானை ரசிகர்கள் டிரோல் செய்து வருகின்றனர். திரைபிரபலங்களும் ஜவான் படத்திற்கு உற்சாக வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
படத்தின் ஆரம்பத்தில் இந்திய எல்லை பகுதியில் படுகாயங்களுடன் மீட்கப்படும் ஷாருக்கானில் இருந்து தொடங்கும் கதையில், பிளாஷ்பேக் அதை தொடர்ந்து நடைபெறும் ஆயுத ஊழல் என ரசிகர்களை உற்சாகபடுத்தியுள்ளது ஜவான். இதில் இரட்டை வேடத்தில் வரும் ஷாருக்கான், ஷாருக்கானை பிடிக்க வந்து ஆக்ஷனில் அசத்தும் நயன்தாரா, வில்லத்தனத்தில் கெத்து காட்டும் விஜய் சேதுபதி, கேமியோ ரோலில் வந்து அசத்தும் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் உள்ளிட்டோரின் நடிப்பு அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.
குவியும் வசூல்:
பதானின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்து இருக்கும் ஜவான் படத்தை பாலிவுட் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். படம் ரிலீசாவதற்கு முன்னதாக 5 லட்சத்தை தாண்டி டிக்கெட்டுகள் முன்பதிவானதால் பாக்ஸ் ஆபிசில் ரூ.80 கோடியை தாண்டி வசூலை வாரி குவிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படத்தின் கிளைமேக்ஸ் சீனில் தன்னுடைய சுய லாபத்திற்காக நாட்டை பாதுகாக்க வாங்கப்படும் ஆயுதங்களில் ஊழல் செய்யும் விஜய் சேதுபதி கொல்லப்படுகிறார். அப்பொழுது அசாத் ஆக வரும் ஷாருக்கானிடம் அடுத்த மிஷனுகான கடிதம் ஒன்று கொடுக்கப்படும். மேலும், இதைவிட பெரிய மிஷன் ஒன்று உள்ளது என சஞ்சய் தத் கூறும் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால், அடுத்த பாகம் எடுக்கப்படுமா என்றும், மீண்டும் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, அனிருத் கூட்டணி இணையுமா? என்ற விவாதத்தில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க: Jawan Cast Salary: சம்பளத்தை வாரிக்கொடுத்த ஷாருக்கான்? ஜவான் படக்குழுவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Jawan Review : கலெக்ஷனா? காப்பியா?.. அட்லீ செய்தது என்ன?.. ஜவான் படம் முழு விமர்சனம் இதோ..!