நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா திரைப்படத்தின் OTT உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யான தகவல் என்று கோப்ரா படத்தின் தயாரிப்பு நிறுவனமான Seven Screen Studio தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. 


டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் புதிய படம் தான் கோப்ரா. seven screen studios சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த படத்திற்கான பணிகள் தொடங்கியது. ஆரம்பத்தில் விக்ரம் 58-ஆக உருவான இந்த படத்தின் தலைப்பு கோப்ரா என்று படக்குழு அறிவித்தது. 


<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Fake News !! <a >https://t.co/RCbW2EuSZH</a></p>&mdash; Seven Screen Studio (@7screenstudio) <a >April 10, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


வெளிநாடுகளில் மும்மரமாக படப்பிடிப்பு பணிகள் நடந்துவந்த நிலையில் கொரோனா காரணத்தால் படப்பிடிப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு பல மாதங்கள் கழித்து மீண்டும் தற்போது படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.