தமிழ் திரையுலகின் முன்னணி மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை இயக்கும் தரமான இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவரது முதல் படம் சேது. இந்த படம்தான் தமிழ் சினிமாவிற்கு விக்ரம் என்ற அற்புதமான நடிகரை அடையாளம் காட்டியது. இந்த படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் அபிதா.




மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தின் நாயகியாக அபிதா இருந்தாலும், அவர் சின்னத்திரைக்கு திரும்பிவிட்டார். தற்போது, சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வரும் அபிதா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் கோலிவுட்டில் இருந்து சின்னத்திரைக்கு வந்த காரணத்தை கூறியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது,


“ சேது படத்தில் நடித்தபோது எனக்கு நடனக்காட்சி இருந்தது.  எனக்கு நடனமாட வரவில்லை. இதைப் பார்த்த இயக்குனர் பாலா அனைவரின் முன்பும் என்னைத் திட்டிவிட்டார். இதனால், நான் இனிமேல் அந்த படத்தில் நடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டேன். அதன்பிறகு, என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். மறுநாள் படப்பிடிப்புக்கு வந்து பாலாவிடம் மன்னிப்புக் கேட்டேன். உன் நல்லதுக்கு தான் திட்டினேன் என்று பாலா கூறினார். சேது படம் ரீலீஸ் ஆகும் வரை வேறு படங்களில் நடிக்கக்கூடாது என்று பாலா கூறினார். ஆனால், நான் சில படங்களில் கமிட்டாகிவிட்டேன். என் சூழல் அப்படி இருந்தது. இதனால்தான் பாலா சாருக்கு என் மேல் கோபம் என்று நினைக்கிறேன்.




சேது படம் தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்கவில்லை. ஆனால், சேது படத்திற்காக நானும் உழைத்திருக்கிறேன். இவற்றை எல்லாம் பார்த்தபிறகுதான் இனி நமக்கு சினிமா வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேன். சின்னத்திரை பக்கம் சென்றுவிடலாம் என்று முடிவு செய்தேன்.” இவ்வாறு அவர் கூறினார்.


2007ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் நாடகம் மூலமாக அபிதா மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சேது படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகனாக விக்ரமும், தவிர்க்க முடியாத இயக்குனராக பாலாவும் உருவெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது, 


மேலும் படிக்க : கட்டாகுஸ்தி செட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்: குஸ்தி வீரனாக மாஸ் காட்டிய விஷ்ணு விஷால்


மேலும் படிக்க : Brahmastra: காப்பி அடிக்கலாம்.. அதுக்குன்னு இப்படியா.. கேசரியா பாடலை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண