விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடர் மூலம் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி பிரபலமானது. கடந்த 2019 ம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். பின்னர் இவர்களுக்கு 2020ம் ஆண்டில் ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு ஆல்யா மானசா ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்தார். ஐபிஎஸ் படிக்க ஏங்கும் துணிச்சலான குடும்பத்தலைவி கதாபாத்திரத்தில் நடிப்பில் கவனம் ஈர்த்து வந்தார்.


டி.ஆர்.பி.யிலும் நல்ல இடத்தை பிடித்ததோடு, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. சஞ்சீவ் காற்றின் மொழி என்ற தொடரில் நடித்து முடித்து விட்டு, கயல் என்ற புதிய தொடரில் நடித்து வந்தார். இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.



இந்நிலையில் ஆல்யா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்தார் ஆலியா. அதனை தொடர்ந்து பிரசவம் நெருங்கும் காலம் என்பதால் அண்மையில் 'ராஜா ராணி 2' சீரியலில் இருந்து விலகினார் ஆலியா. இதனிடையே கடந்த மார்ச் 26 ம் தேதியன்று ஆல்யா மானசாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. தங்களது மகனுக்கு சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி அர்ஷ் என்று பெயர் சூட்டியுள்ளனர்.


இந்த நிலையில் சஞ்சீவ் - ஆல்யா ஜோடி தங்களது மகனின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதில் மருத்துவமனையில் மருத்துவர்களிடம் இருந்து சஞ்சீவ் பெற்று, தூக்கி மகிழ்வது போன்ற படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சஞ்சீவ் - ஆல்யா மானசா தம்பதியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண