"அண்ணா ஆனந்த் ண்ணா .. தூங்க வுடுங்க அண்ணா" - கலாய்த்த பிரபல சீரியல் நடிகை 


செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய சரண்யா துராடி சுந்தர்ராஜ், விஜய் தொலைக்காட்சியின் மூலம் சீரியல்களில் ஆரம்பித்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார். 


சரண்யா புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். அந்த சமயம் அவருக்கு இரண்டு  திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி மற்றும் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது திரைப்படத்தில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்து வந்த நிலையில்  விஜய் தொலைக்காட்சின் "நெஞ்சம் மறப்பதில்லை" சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் சரண்யா விக்ரம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஏராளமான சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிறந்த புது முக நடிகை என்ற விருதையும் பெற்றார். 



அவரில் சிறப்பான நடிப்பால் வேறு பல தொலைக்காட்சிகளும் சீரியல் வாய்ப்பு கிடைத்து மிகவும் பிஸியாக இருந்தவர் சரண்யா. சமூகவலைத்தளத்தில் ஆக்டிவ் ஆகஇருந்து வரும் சரண்யா அவ்வப்போது புகைப்படங்கள், குறிப்பு பதிவு செய்வதுண்டு. அந்த வகையில் தற்போது ஒரு வேடிக்கையான போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 


ஆனந்த் ஸ்ரீனிவாசன் - நிதி ஆலோசகர். மக்களுக்கு குறிப்பாக நடுத்தர மக்களுக்கு செலவுகளை குறைத்து தங்களின் பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்திட வேண்டும் என்ற பல குறிப்புகளை அவ்வபோது கொடுத்து வருகிறார். சேமிப்பு குறித்து பல உபயோகமான டிப்ஸ் கொடுப்பார். அவரின் ஆலோசனையின் படி பல நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயனடைந்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.


நெட்டிசன்கள் யாரையாவது வைத்து மீம்ஸ் செய்வது இப்போது உள்ள ட்ரெண்ட். அந்த மீம்ஸ் வலையில் தற்போது சிக்கியுள்ளனர் ஆனந்த் ஸ்ரீனிவாசன். அவரின் ஆலோசனைகள் பெரும்பாலும் எப்படி எல்லாம் சம்பாதிக்க முடியும் அதை எவ்வாறெல்லாம் சேமிக்க முடியும் என்பதாக தான் இருக்கும். இதில் சேமித்தல் நல்ல வருமானம் கிடைக்கும் என பல தகவல்களை எளியவருக்கும் புரியும் வகையில் எடுத்துரைப்பார். 


ஆனந்த் ஸ்ரீனிவாசனை கலாய்க்கும் வகையில் "இப்படி நைட் தூங்கறதுக்கு பதிலா நைட் ஷிபிட் வாட்ச்மேன் வேலைக்கு போயிருந்தா இந்நேரம் நீ செத்து இருப்ப உன்னோட லைப் எக்ஸ்பென்சஸ் மிச்சம் ஆகி இருக்கும்" என்று அவர் அட்வைஸ் செய்வது போன்ற ஒரு மீம்ஸ் வைரலாகி பரவி வருகிறது. 


இந்த மீம்ஸ்ஸை சரண்யா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு "அண்ணா ஆனந்த் ண்ணா .. தூங்கவுடுங்க அண்ணா" என்று கலாய்த்து பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வளைத்ததில் வைரலாகி வருகிறது.