ஆரப்பாளையம் கார்த்தியை தேடி அழைந்ததில் இருந்து, ஆர்ப்பாட்டத்தோடு சமூக வலைதளத்தில் ஆர்ப்பரிக்கும் வரை அனைவருக்கும் அடையாளமானவர் திவ்யா. தன் பெயருக்கு பின்னால் அடைமொழியோடு வளம் வரும், பட்டதாரி பெண்.
டிக்டாக் சமூகத்தில் சீரழிந்த ஒரு கூட்டத்தில், இவருக்கு முக்கிய பங்கு உண்டு. டிக்டாக் தடை செய்யப்பட்ட பின், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளத்தின் அனைத்து தளங்களிலும் ஊடுருவி, முடிந்த வரை அனைவரையும் இம்சித்து இன்புற வைக்கும் நாகரீக கோமாளி.
சமீபத்தில், இவரைப் போன்றே செயல்படுவோரிடம் மோதி, முட்டி, ஜெயிலுக்குகெல்லாம் போய் வந்த, சிறைப்பறவை. ஆனாலும், அனைத்து முதலீடு, மூலதனம் எல்லாமே இணையத்தில் தான் இன்றும் தொடர்கிறது. அந்த வகையில் அவரது அன்றாட பதிவுகள் உப்புச் சப்பு இல்லாமல் இன்றும் தொடர்கிறது.
அதை காண ஒரு கூட்டம், அதை பகிர ஒரு கூட்டம் என திவ்யா காட்டில், அடை மழை பெய்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் கடந்து, அவர்களை திருப்திப்படுத்த திவ்யா எடுக்கும் முயற்சிகள் தான், 1980களை கடந்த ஐடியாக்கள். அந்த வகையில் இன்று ஒரு கன்டெண்ட் போட்டுள்ளார். அவர் வீட்டில் 200 ரூபாய் காணாமல் போய்விட்டதாம். அதற்கு அவர் செய்யும் அட்டகாசத்தை பாருங்கள்.
‛‛இந்த ஜெயின் பார்த்தீங்கன்னா... தங்கச் செயின். சொன்னா நம்ப மாட்டீங்க. நாட்டில பார்த்தீங்கனா நிறையா திருட்டு பிரச்சனை நடக்குது. அவங்களுக்கு தூக்குத்த தண்டனை கொடுக்கணும். வீட்ல போய் திருடுறவன், கொள்ளையடிக்கிறவன் இல்லைன்னா நாடு வல்லரசா ஆகிடும்.
என் காசு எம்புட்டு தான் காணாமல் போவது. 200 ரூபாய் காணாமல் போச்சு. போன மாசம் 100 ரூபாய் போச்சு, அதுக்கு முந்துன மாசம் 200 ரூபாய் காணாமல் போச்சு. அய்யய்யோ... எங்க வீட்ல பிரச்னையே இன்னைக்கு இது தான். 200 ரூபாய் காணாமல் போனது தான், எங்க வீட்டில் பிரச்சனை. இன்னைக்கு எங்க வீட்ல இது பிளாக் டே. இன்னொரு சுவாரஸ்யமான விசயம் எங்க வீட்டில் நடந்துச்சு.
இன்னைக்கு கன்டன்ட் அது தான், எங்க வீட்டுல 200 ரூபாய் காணாமல் போச்சு. யார் எடுத்தாங்களோ அவங்க நா.... போக, வெ... போக, உரு.... போக, எலி எடுத்திருந்தால், அது எலியும் செத்து போயிடும். அப்பாடா... காசு காணாமல் போன கன்டென்ட் வெச்சு இரண்டு கன்டெண்ட் ஓட்டியாச்சுப்பா,’’
என்று கூறி,அந்த வீடியோ முடித்துள்ளார் திவ்யா. 200 ரூபாய்க்கு தூக்கா? மொரட்டுத்தனமான கன்டெண்ட் தான். கீழே ஓரு வீடியோ, அவரோடது தான். விரும்பினால் பாருங்கள்!