சின்னத்திரையில் ஒளிப்பரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ரோஷ்னி. சீரியல்களில் நடிக்க டஸ்கி ஒன்னும் தடை இல்லை என்பதை சாதித்து காட்டியவர். ஆரம்பத்தில் சிலர் இவரெல்லாம் ஹீரோயினா என சமூக வலைத்தளங்களில் கிசு கிசுத்தாலும் பின் நாட்களில்  ரோஷினிக்கான ஆர்மி பக்கங்களும் , ரசிகர் பட்டாளமும் பெருக துவங்கியது. விறு விறுப்பாக சென்றுக்கொண்டிருந்த சீரியலில் இருந்து ரோஷ்னி திடீரென விலகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.


அவர் திரைப்படங்களில் கமிட்டாகியிருப்பதாக கூறப்பட்ட நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ரோஷ்னி சமீபத்தில் தன்னுடைய கேரக்டர் குறித்தும் சீரியலில் கண்ணம்மா கேரக்டர் குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.






அதில் “ஒரு பெண் குடும்பத்திற்காக விட்டுக்கொடுப்பது தவறில்லை. ஆனால் தன்னை குறித்து அவதூறு பரப்பினால் அதனை எதிர்த்து நிற்க வேண்டும் அந்த இடத்தில் அமைதியாக இருப்பது தவறு அப்படியான கதாபாத்திரம்தான் கண்ணம்மா. மாமியார்  சௌந்தர்யா எமோஷ்னலாக சூப்பரா நடிப்பாங்க. கண்களாலேயே நடிப்பாங்க. நாங்க எல்லாம் வியந்து பார்ப்போம். நிஜ வாழ்க்கையில அவங்க ரொம்ப அன்பானவங்க. நான் சீரியல்ல நடிக்க வற்றதுக்கு முன்னால ஒரு  பேங்க்ல வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். 9 - 5 வேலை. ஒருநாள் அது பிடிக்கலைனு விட்டுட்டு வந்துட்டேன். எனக்கு ஃபோட்டோ எடுக்கவும் எடிட் பண்ணவும் பிடிக்கும். அப்படி என்னை நானே ஃபோட்டோ எடுத்து பார்த்துட்டு , பரவாயில்லை நானும் நல்லாதான் இருக்கேன். எனக்கு ஒன்னும் குறை இல்லையேனு நினைக்க ஆரமிச்சேன்.


அப்படிதான் எனக்கு நிறைய  ஃபோட்டோ ஷூட்ஸ் வந்துச்சு. அப்படியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பண்ணுவது எனக்கு பிடிக்கும். அப்படித்தான் ஒருநாள் பிரவின் சார் , என்னுடைய புகைப்படங்களை பார்த்துட்டு என்னை சீரியலுக்கு கூப்பிட்டாரு. நடிக்க போறப்போ ஜூனியர் ஆர்டிஸ்டெல்லாம் என் காதுபட பேசினாங்க. என்ன இவங்களை எல்லாம் ஹீரோயினா போட்டுருக்காங்கன்னு. கொஞ்சம் கஷ்டமா இருக்கும் . ரொம்ப மோசமா இருக்கிறேனானு ஃபீல் பண்ணேன்.


ஆரம்பத்துல ரொம்ப சூப்பரா நடிச்சேன்னும் சொல்ல முடியாது. அதனால நிறைய பேர் சிரிப்பாங்க. கிண்டல் பண்ணுவாங்க. சீரியல்ல நான் ரொம்ப ஹோம்லிதான் , ஆனால் உண்மையா நான் மார்டனான பொண்ணு. எனக்கு மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்க ஆசை. ரம்யா கிருஷ்ணன் மாதிரி வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை” என பகிர்ந்திருக்கிறார்  ரோஷ்னி.