ஆக்டீவாக இருக்கும் அம்மாக்களின் குழந்தை அதிக எதிர்ப்பு சக்தி பெறும் குழந்தைகளாக இருப்பார்கள் என்று நிறைமாதக் கர்ப்பத்தில் செம குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ஐஸ்வர்யாவின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


பெண்கள் என்றாலே வலிமை என்று தான் அர்த்தம். எத்தனையோ மன வேதனைகளை தனக்குள் அடக்கிக் கொண்டிருந்தாலும் தான் பெற்ற குழந்தையின் முகத்தில் சிரிப்பை மட்டும் பார்க்க நினைக்கும் தீர்க்கதரிசி. பொதுவாக குழந்தைப்பேரு என்பது பெண்கள் வாழ்வில் கிடைத்த வரப்பிரசாதம். தற்போது மிகவும் அரிதாகிவிட்ட காரணத்தினால் தான் கருத்தரிப்பு மையங்கள் அதிகரிக்கிறது. இதனையெல்லாம் தவிர்த்து ஒரு பெண் இயற்கையாக கருத்தரிக்கிறார் என்றால், எந்த வேலையையும் செய்யக்கூடாது, ரெஸ்ட் தான் எடுக்க வேண்டும் என பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு  எனவும், எப்போதும் ஆக்டிவ்வா இருந்தால் மட்டுமே நம் வயிற்றில் வளரும் குழந்தையும் அதிக எதிர்ப்புசக்தியோடு பிறக்கும் என்கிறார்கள் நம் முன்னோர்கள்.





அதற்கேற்றால் போல் தான் சமீபத்தில் இன்ஸ்டகிராம் பக்கத்தில்,  சீரியல் நடிகை நிறைமாத காலத்தில் குத்தாட்டம் போட்டதோடு,  இதனால் தன்னுடைய குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. சன் தொலைக்காட்சியில் சூப்பர் குடும்பம், மகாபாரதம், சந்திரலேகா, பைரவி  போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தான். இவர் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன், சூப்பர சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளிலும் இவரைப் பார்த்திருப்போம். இதோடு ஜோடி நம்பர் 1 சீசன் 3 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் நடனம் ஆடியுள்ளார். 7C தொடரிலும் விஜய் டிவியில் நடித்துள்ளார்.


ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட இவர் இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு 2021 ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. இந்நிலையில் தான் தன்னுடைய முதல் குழந்தையின் கர்ப்பகாலத்தின் போது நடனம் ஆடிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டதோடு, பெண்கள் ஆரோக்கியமாக இருக்க எப்போதும் ஆக்டிவ்வா இருக்கணும் என்று கூறியுள்ளார்.


 






மேலும் நான் ஒரு நடனக்கலைஞர். என்னுடைய வாழ்நாள் முழுவதும் இப்படியே இருக்க விரும்புகிறேன். கர்ப்பம் என்பதால் ஓய்வு எடுக்க பிடிக்கவில்லை. அதனால் தான் மருத்துவர்களின் அறிவுரையின் படி நடனம் ஆடினேன் என பதிவிட்டுள்ளதோடு  அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். இதோடு சுறுசுறுப்பான தாயின் குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் IQ உள்ளது என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது. எனவே நான் அதைப்பின்பற்றுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.


இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துவருகின்றனர். இதோடு இவருக்கு இதுப்போன்ற அசாதாரண விஷயங்கள் புதிதல்ல என்றும் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர். சீரியலில் நடித்து வந்த காலக்கட்டத்தில், ஒரு நடன நிகழ்ச்சியில் பிராங்க் செய்கிறேன் என நடன கலைஞர் ஒருவரிடம் மேடையிலேயே தனது காதலை வெளிப்படுத்திய ப்ரோமோ வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது..


Also Read | Etharkkum Thunindhavan Review: துணிந்து பார்க்கும் படமா எதற்கும் துணிந்தவன்? உள்ளதை உள்ளபடி சொல்லும் விமர்சனம்!