விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், பா.ஜ.க. நிர்வாகியுமான நடிகர் ராதாரவி தற்போதைய விஜயகாந்தின் புகைப்படம் குறித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக, ராதாரவி பேசியிருப்பதாவது,
“ பெரியார் வழியில் வந்த எம்.ஆர்.ராதா மகன் சபரிமலைக்கு செல்கிறேன் என்றெல்லாம் கிண்டல் செய்துள்ளனர். அதைப்பற்றி எல்லாம் நான் வருத்தப்பட்டதில்லை. விஜயகாந்த் போட்டோவை சமீபத்தில் பார்த்தேன். இப்படி ஒரு அன்னதானம் செய்தவர், இப்படி ஒரு தருமம் செய்தவர், அவருக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாது. கண்ணுபடப் போகுதய்யா படம் நேற்று பார்த்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் அழுகை வந்துவிட்டது.
இவருடைய புகைப்படம் பார்த்து அழுதுவிட்டேன். என்ன வருத்தமென்றால் இத்தனை வருடம் உடன் பழகிய எனக்கு விஜயகாந்தை அடையாளம் தெரியவில்லையே என்பதுதான் மிகவும் வருத்தமாகிவிட்டது. என் நண்பர் இந்த போட்டோவை அனுப்பி யார் என்று தெரிகிறதா? என்று கேட்டார். எனக்கு தெரியவில்லை என்றேன். அவர் விஜயகாந்த் என்று கூறினார். நான் அப்படியே ஆடிப்போயிவிட்டேன். என்னால் தாங்க முடியவில்லை.
எப்படியாவது பார்க்க முயற்சித்தேன். சுதிஷீற்கு போன் செய்தேன். எடுக்கவில்லை. மெசேஜிற்கும் ரிப்ளை செய்யவில்லை. விஜயகாந்த் மகனிடம் கேட்க சொன்னார்கள். நான் போன் செய்தேன். அவரிடம் அப்பாவை பார்க்க வேண்டும் என்று கேட்டேன். அவர் சரி என்று கூறினார். அதே நேரம், அம்மாவிடமும் ஒரு வார்த்தை கேட்கிறேன் என்று கூறினார். எதனால் விஜயகாந்தை என்னை பார்க்கவிடவில்லை என்று தெரியவில்லை. விஜயகாந்தை பார்க்க விடவில்லை. போட்டோவை பார்த்தது முதல் மனசு சரியில்லை.
நான்கு நாட்களாகியும் விஜயகாந்தை பார்க்க அனுமதி கேட்டதற்கு பதிலளிக்கவில்லை. எங்கள் குரூப்பில் விஜயகாந்த் மட்டுமே ஹீரோ. நான், தியாகு, வாகை சந்திரசேகர், எஸ்.எஸ். சந்திரன், பாண்டியன் எல்லாம் விதவிதமான நடிகர்கள். நாங்கள் 5 பேரும் கஷ்ட, நஷ்டத்தில் ஒன்றாக இருந்தவர்கள். விஜயகாந்திடம் பெரியளவில் தொடர்பில் இல்லை. விஜயகாந்தை அதிகளவில் சினிமா கம்பெனிக்கு அழைத்துச் சென்றது குள்ளமணிதான். அவரை கடைசி வரை பார்த்துக் கொண்டார் விஜயகாந்த்.
விஜயகாந்த் மிகவும் வலிமையானவர், அவர் நெல்மூட்டையை தனது விரலிலே குத்தி பார்க்கும் அளவிற்கு வலிமையானவர்.”
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் விஜயகாந்தும், ராதாரவியும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். விஜயகாந்த் நாயகனாக நடித்த பல படங்களுக்கு ராதாரவி வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரமாகவும் நடித்துள்ளனர்.
Also Read | Etharkkum Thunindhavan Review: துணிந்து பார்க்கும் படமா எதற்கும் துணிந்தவன்? உள்ளதை உள்ளபடி சொல்லும் விமர்சனம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்