விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் கனா காணும் காலங்கள். இந்த தொடரில் நடித்து வருபவர் ஹரிபிரியா. கனா காணும் காலங்கள் தொடருக்கு முன்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியல் மூலமாக மிகவும் பிரபலமானார்.
நடிகை ஹரிப்பிரியா சக சீரியல் நடிகரான விக்னேஷ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஹரிபிரியா – விக்னேஷ்குமார் தம்பதியினர் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தனர். அடிக்கடி சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், திடீரென இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். இது சின்னத்திரை உலகத்திலும் அவர்களது ரசிகர்கள் வட்டாரத்திலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஹரிபிரியா –விக்னேஷ் தம்பதியினர் இடையேயான விவகாரத்திற்கு பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர்தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. சன் தொலைக்காட்சியின் முன்னணி நிகழ்ச்சித்தொகுப்பாளரான அசார் காரணமாகவே ஹரிபிரியா – விக்னேஷ் தம்பதியினர் விவகாரத்து செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஹரிபிரியா இதுதொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில் அசார் தன்னுடைய பாய்பிரண்ட் இல்லை, காதலர் இல்லை, தனது வாழ்க்கைத் துணையும் இல்லை என்றும் கூறியுள்ளார். அதேசமயம் ஒருவருடன் மகிழ்ச்சியாக பேசுவது என் உரிமை. அதை தவறாக புரிந்துகொள்வது பார்ப்பவர்களின் தவறு என்றும் கூறியுள்ளார்.
ஹரிபிரியா தற்போது சன் தொலைக்காட்சியில் புதியதாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரில் நடித்து வருகிறார். அசார் சன் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சிகள், முக்கிய பிரபலங்களுடனான நேர்காணல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹரிபிரியா- விக்னேஷ்- அசார் விவகாரம் அவரவர்கள் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்