மாலத்தீவில் விடுமுறையை கழித்து வரும் நடிகை தமன்னா, அங்கு எடுக்கப்பட்ட தனது அழகான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அத்துடன் பிகினி போன்ற உடையில் இருக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அவை எல்லாம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா. இருந்தப்போதும் கல்லூரி திரைப்படத்தில் நடித்ததின் மூலம் சிறந்த அங்கீகாரத்தைப்பெற்ற இவர் தொடர்ந்து, வியாபாரி, அயன், பையா, பாகுபலி போன்ற பல்வேறு படங்களில் தன்னுடைய நடிப்பைத் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார். இதுப்போன்ற பல வெற்றிப்படங்களின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, கடைசியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆக்சன் என்ற தமிழ்ப்படத்தில் நடித்திருந்தார்.
இதனையடுத்து இவருக்கு தமிழில் எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். நடிகைகள் பலர் வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்திரா சுப்ரமணியம் இயக்கிய நவம்பர் ஸ்டோரி வெப் தொடரில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
சமீபத்தில், இந்தியாவின் புகழ்பெற்ற ரேப்பரான பாட்ஷாவின் தபாஹி பாடலுக்கு தமன்னா ஆடியுள்ளார். பாடல் தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.
Also Read | Simbu Balmain Pant: ஆத்தே..! சிம்பு போட்ருக்க பேண்ட் விலை இவ்ளோவா..? வாயைப் பிளந்த ரசிகர்கள்..!
தற்போது, மாலத்தீவில் தமன்னா தனது பொழுதை கழித்து வருகிறார். அங்கு ஜாலியாக சுற்றி வரும் அவர் விதவிதமாக போட்டோகளை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். நீச்சல் உடையில் இருக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். பிங்க் கலரில் பார்ப்பதற்கு பிகினி உடையில் தமன்னா நடந்து செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதேபோல், இளநீர் குடிக்கும் வீடியோ மற்றும் மற்றொரு டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதுவும் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்