தமிழ் சினிமாவில் ஆல் டைம் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் நல்ல ஒரு கம்பேக் படமாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தலைவர் படு பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி அன்று பார்த்தது போலவே அதே இளமையுடனும், சுறுசுறுப்புடனும் படங்களில் நடித்து வருகிறார். 


அடுத்தடுத்த ப்ராஜெக்ட்ஸ் :


அந்த வகையில் தற்போது 'ஜெய்பீம்' புகழ் ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார். மேலும் பாலிவுட் சினிமாவின் பிரபலமான தயாரிப்பாளரான சஜித் நடியட்வாலா தயாரிப்பில் ஒரு படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க உள்ளார் என்பது லேட்டஸ்ட் செய்தி. இப்படி படு பிஸியாக பம்பரம் போல சுழலும் நடிகர் ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் அற்புதமான வாய்ப்பை தவறவிட்டுவிட்டார் சீரியல் நடிகை ஒருவர். 



சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி :


சமீபகாலமாக வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக பிரபலத்திலும், ரசிகர்களின் எண்ணிக்கையிலும் போட்டி போடும் அளவுக்கு பேமஸாக உள்ளனர் சின்னத்திரை நடிகைகள். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'கயல்' சீரியலில் டைட்டில் கேரக்டரில் நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. இவர் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.  


 



அதற்கும் முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துவந்த கேரக்டரில் அவருக்கு பதிலாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சீரியல்களிலும் பிஸியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி ஏற்கனவே நடிகர் அஜித் நடித்த 'வலிமை' படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார். 



வாய்ப்பை இழந்த சைத்ரா ரெட்டி :


நடிகர் ரஜினிகாந்த் மருமகளாக 'ஜெயிலர்' படத்தில் நடித்திருந்தார் நடிகர் மிர்னா மேனன். அப்படத்தில் அவரின் நடிப்பு நல்ல பிரபலத்தை தேடி கொடுத்தது. இவர் ஏற்கனவே ஒரு சில மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், ஜெயிலர் படம் தான் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்துள்ளது. 


 



முதலில் ரஜினியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்ந்து எடுக்கப்பட்டது சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி. ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனதால் அந்த கதாபாத்திரத்தில் நடிகை மிர்னா மேனனை நடிக்க வைத்துள்ளார் நெல்சன். கிடைத்த நல்ல வாய்ப்பை இழந்துவிட்டாரே நம்ம கயல் என நடிகை சைத்ரா ரெட்டியின் தீவிர ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.