நாள்: 29.02.2024 - வியாழக்கிழமை


நல்ல நேரம்:


காலை 10.30 மணி முதல் காலை 11.00 மணி வரை


இராகு:


பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை


குளிகை:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


எமகண்டம்:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


சூலம் - தெற்கு


மேஷம்


பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். வியாபாரத்தில் தனவரவுகள் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் நன்மதிப்பு கிடைக்கும். ஆடம்பரம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். மேன்மை நிறைந்த நாள்.


ரிஷபம்


குடும்பத்தினரிடையே மனம் விட்டு பேசுவீர்கள். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். உத்தியோகத்தில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடிவரும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.


மிதுனம்


முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குழந்தைகளின் உயர் கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். அலுவலகப் பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். போட்டி நிறைந்த நாள்.


கடகம்


உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கடியான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். பயணங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கால்நடை சார்ந்த விஷயங்களில் மேன்மை ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.


சிம்மம்


தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய வாகன முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.


கன்னி


கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணியில் ஆர்வம் ஏற்படும். தடைபட்ட சில விஷயங்கள் முடிவுக்கு வரும். வீடு, மனை விற்பதில் லாபம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். உழைப்புக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


துலாம்


 சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். சாலை பயணங்களில் கவனம் வேண்டும். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தோல்வி மறையும் நாள்.


விருச்சிகம்:


விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் தீர ஆலோசனை கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். எதிலும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. அசதி மறையும் நாள்.


தனுசு


மனதளவில் உற்சாகம் பிறக்கும். பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். மற்றவர்களின் மூலம் அனுகூலமான பலன் ஏற்படும். புதிய இடம் வாங்குவதற்கான வாய்ப்பு கைகூடிவரும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். தனம் நிறைந்த நாள்.


மகரம்


சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு ஏற்படும். உறவுகளின் வழியில் ஆதாயம் உண்டாகும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் புதுவிதமான சூழல் உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகள் சாதகமாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். சலனம் நிறைந்த நாள்.


கும்பம்


கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் மறையும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். மகான்களின் சந்திப்பு சிலருக்கு ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். ஆர்வம் நிறைந்த நாள்.


மீனம்


உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். பணி சார்ந்த அவசர முடிவுகளை தவிர்க்கவும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.