அழகி சீரியலில் அமைதியான கதாபாத்திரத்தில் நடித்த சோனியா மீண்டும் பல ஆண்டுகளுக்குப்பிறகு சன்டிவியின் அருவி சீரியலின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
கொரோனா காலக்கட்டம் பலரை சீரியலுக்கு அடிட் ஆகிவிட்டது. எந்த செய்தி சேனலைப்பார்த்தாலும் கொரோனா அபாயம், உயிரிழப்பு என அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தும்படியாக இருந்தமையால் பல வீடுகளில் ரிமோட்கள் சீரியல் பக்கம் திரும்பின. அதற்கேற்றால் போல் ஒவ்வொரு சேனலும் மக்களின் விருப்பத்திற்கேற்ப கதைக்களத்தை எடுப்பதோடு டிஆர்பியில் முன்னிலை வகித்துவருகின்றனர். மேலும் தினமும் தொலைக்காட்சிகளில் சீரியல் நடிகர், நடிகைகளை மக்கள் பார்த்துவருவதால் வெள்ளித்திரை நாயகர்களை விட மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகின்றனர். எனவே பலர் சின்னத்திரை சீரியல்களின் ஆடிசன்களில் கலந்துக்கொள்வதாகவும் தகவல் வெளியாகிறது.
இது ஒருபுறம் இருக்க சின்னத்திரை சீரியல்களின் முன்னாள் நாயகிகளும் மீண்டும் சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்குகின்றனர். ஆம் சீரியலுக்கு மிகவும் பிரபலமான சன்டிவியின் அழகி சீரியலில் திவ்யா சீரியலில் நடித்த சோனியா, 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் சிறிது காலம் நடிப்பதற்கு பிரேக் விட்ட இவர், மீண்டும் அருவி என்ற சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்துவருகிறார்.
இதுக்குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சோனியா, திருமணத்திற்கு பிறகு மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கலாம் என யோசித்தப்போது தான் மீண்டும் சன்டிவியில் வாய்ப்பு கிடைத்தாக தெரிவித்தாார். என்னுடைய முதல் சீரியலும் சன்டிவியில் என்பதால் ஆர்வத்துடன் இதற்கு ஒத்துக்கொண்டேன் என்றும் நாம் மீண்டும் நடிக்கப்போகிறேன் என்று சொன்னதும் எனது குடும்பமும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எனவும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அருவி சீரியல் சூட்டிங் ஸ்பாட்டிற்கு முதன்முறையாக சென்றபோது அனைவரும் நான் புதிதாக நடிக்க வந்திருக்கிறேன் என்று நினைத்தார்கள். முந்தைய சீரியல்களில் நான் கொஞ்சம் குண்டாக இருந்தேன் தற்போது வெயிட் லாஸ் பண்ணதுனால யாருக்கும் அடையாளம் தெரியல எனவும் போகப்போகத்தான் ஏற்கனவே சீரியலில் நடித்தது தெரியவந்தது என பகிர்கிறார். மேலும் பல ஆண்டுகள் கழித்து சீரியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் போது கேமிரா எனக்கு புது அனுபவமாக இருந்தது. ஆனாலும் சீரியலின் மொத்த டீமும் எனக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணினாங்கன்னு தெரிவித்தார்.
இதோடு சீரியல் வாழ்க்கை மட்டுமில்லாது சார்விக்ஸ் என்ற இட்லி மற்றும் தோசை மாவு என்கிற நிறுவனத்தில் நடத்தி வருவதாகவும், கேரியர் , பிசினஸ் என இரண்டையுமே மேனேஜ் செய்துவருகிறேன். இதற்கு எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உறுதுணையாக இருக்கிறார்கள் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் இளைய தளபதி விஜய்யின் அம்மா சோபாவும் என்னுடைய மிக சிறந்த வழிக்காட்டி என தெரிவித்த அவர், எனது கணவரின் பேமிலி ப்ரெண்ட் என்பதால் திருமணத்திற்குப் பிறகு நாங்கள் நல்ல க்ளோஸ் ஆகியிட்டோம் என மகிழ்வுடன் கூறுகிறார். மேலும் என்னுடைய அருவி சீரியல் டெலிகாஸ்ட் ஆனதும் பார்த்துவிட்டு பாராட்டுவதோடு மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொண்டார்.