மெய்யழகன் பட டிரைலர்


கார்த்தியின் 27 ஆவது படமாக உருவாகி இருக்கும் படம் மெய்யழகன். 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். அரவிந்த் சாமி , ராஜ்கிரண் , ஶ்ரீதிவ்யா , தேவதர்ஷினி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சூர்யா ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இன்று இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ் படங்கள்


நடப்பாண்டிற்கான ஆஸ்கர் விருதிற்கான போட்டிக்கு இந்தியா சார்பில் மொத்தம் 28 படங்கள் அனுப்பப்பட உள்ளது. இதில் மொத்தம் 6 தமிழ் படங்கள் ஆகும். அந்த வகையில்  மகாராஜா, கொட்டுக்காளி, ஜமா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, தங்கலான் ஆகிய படங்கள் ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு அனுப்பப்படுகிறது. வதெலுங்கில் இருந்து 3 படங்களும், மலையாளத்தில் இருந்து 4 படங்களும், ஒடியா மொழியில் இருந்து 1 படமும், இந்தியில் இருந்து 12 படங்களும், மராத்தியில் இருந்து 3 படங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படங்கள் யாவும் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


பைசன் போஸ்டர்


மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வரும் படம் பைசன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வாழை திரைப்படம் மிகப்பெரிய வெற்ற நிலையில் பைசன் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. இன்று துருவ் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு பைசன் படத்தின் சிறப்பு பொஸ்டர் ஒன்றை படக்குழு பகிர்ந்துள்ளது. 


மலையாள இயக்குநருடன் இணைகிறாரா ரஜினிகாந்த்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. வேட்டையன் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறர். கூலி படத்திற்கு பின் ரஜினி  பல்வேறு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக மலையாள இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப் இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத்தில்  நிவின் பாலி , நஸ்ரியா நடித்த ஓம் ஷாந்தி ஓஷானா படத்தின் மூலம் கவனமீர்த்தவர் ஜூன் ஆண்டனி ஜோசப். இந்த தகவல் உண்மையா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்


சூர்யா 45


நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா  நடிகர் ஆர். ஜே பாலாஜி இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.