தி கோட் பாக்ஸ் ஆபிஸ்


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. பிரசாந்த் , பிரபுதேவா , சினேகா , மினாக்‌ஷி  செளதரி , பிரேம்ஜி , ஜெயராம் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


ரசிகர்களின் பெரும் ஆதரவோடு வெளியாகிய தி கோட் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ 126 கோடி வசூல் செய்தது . படம் வெளியாகி 13 நாட்கள் கடந்துள்ள நிலையில் படம் ரூ 413 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 


இணையத்தில் கசிந்த ரஜினியின் கூலி பட காட்சிகள்


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யராஜ் , நாகர்ஜூனா , செளபின் சாஹிர் , உபேந்திரா , ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். கடந்த ஜூலை மாதம் தொடங்கிய கூலி படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினம் ஹார்பரில் நடந்து வருகிறது. அங்கு நாகர்ஜூனாவின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்த யாரோ ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 


பாசிட்டிவ் விமர்சனங்களை பெறும் ஹரிஷ் கல்யாணின் லப்பர் பந்து


தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள திரைப்படம் லப்பர் பந்து. காலி வெங்கட் , சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி , கீதா கைலாசம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் சிறப்பு திரையிடல் இன்று நடைபெற்றது.


லப்பர் பந்து படத்தைப் பார்த்து சினிமா வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். கிரிக்கேட்டை மையமாக வைத்து உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக லப்பர் பந்து திரைப்படம் உருவாகி உள்ளதாக பலர் தெரிவித்துள்ளார்கள்.


நடிப்பு, இசை , படத்தின் இயக்குநர் பேசும் அரசியல் ஆகியவை இப்படத்தின் பிளஸ் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனால்  லப்பர் பந்து திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது 




மேலும் படிக்க : Amazon Prime Video : இந்த வாரம், அமேசான் ப்ரைம் வீடியோவுல ட்ரீட்.. இந்த லிஸ்ட்டை மறக்காதீங்க..


Ajith : ”ரொம்ப சாரி சார்”..ஈகோவே இல்லாமல் செய்த தவறுக்கு வருந்திய அஜித்